Lesi Pay

டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி வழங்கும் Lesi Pay ஊடாக இலகுவான தவணை கட்டண திட்டத்துடன் சமீபத்திய ஆண்ட்ராய்டு சாதனங்களை நீங்கள் கொள்வனவு செய்யலாம். நீங்கள் தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்தால், உங்கள் மொபைல் தொலைபேசியிலிருந்து கடன் வசதிக்கு விண்ணப்பியுங்கள் பின்னர் அருகிலுள்ள டயலொக் வாடிக்கையாளர் சேரவ நிலையத்தில் உங்கள் சாதனத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Key Features
கிரெடிட் கார்ட் அவசியமில்லை
எளிய ஈ-விண்ணப்பப் படிவம்
பல்வேறு வகையான சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்களுடன் இணக்கமானது
விரைவானது மற்றும் எளிதானது
Genie என்பது இலங்கை நுகர்வோருக்கு Lesi Pay கடன் வசதிகளை வழங்கும் ஒரு நிதிச் சந்தையாகும். genie App மூலம் உங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம். மேலும் விபரங்களுக்கு வீடியோவை பார்வையிடுங்கள்: bit.ly/LPEligibility.

உங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லையென்றால், #2020# டயல் செய்யுங்கள்.
Lesi Pay கடன் வசதியை வழங்கும் சமீபத்திய சாதனங்களைக் காண உங்களுக்குப் பிடித்த பிராண்டைக் க்ளிக் செய்யுங்கள்.
கடன் வசதிக்கு விண்ணப்பிக்கும்போது, ​​ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ஒரு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். உங்கள் தேசிய அடையாள அட்டையை கையில் வைத்திருக்கவும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டவுடன், உங்கள் சேமிப்புக் கணக்கு விபரங்களைச் சரிபார்க்க genie குழுவினர் வீடியோ அழைப்பின் ஊடாக உங்களை தொடர்பு கொள்வார்கள். பின்னர் நீங்கள் டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சியிலிருந்து ஒரு genie டிஜிட்டல் சேமிப்புக் கணக்கைப் பெற்றுக்கொள்வீர்கள்.

'கடன் வசதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது' என்பதை அறிந்துக்கொள்ள வீடியோவை பார்வையிடுங்கள்: bit.ly/LPAplyLoan
Lesi Pay என்பது உங்கள் கடன்களை சரியான நேரத்தில் மீள் செலுத்துதல் போன்ற உங்கள் நிதிப் பழக்கங்களை மேம்படுத்தும் ஒரு வசதியாகும்இ மேலும் சாதனங்களை மேம்படுத்தும் வாய்ப்பை வழங்குவதன் மூலம் உங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது.

உங்கள் Lesi Pay கடனை எவ்வளவு எளிதாக செலுத்தலாம் என்பதை வீடியோவில் பார்வையிடுங்கள்: bit.ly/LPLoanpay
Lesi Pay வசதி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Lesi Pay என்றால் என்ன?
Lesi Pay என்பது ஒரு சாதன நிதியுதவி தீர்வாகும், இது ஒருவர் விரும்பும் சாதனத்தை வாங்குவதற்கு தவணை கொடுப்பனவுகளில் செலுத்துவதற்கு மைக்ரோலோன்களை வழங்குகிறது.
கடன் வசதிக்கான SMS தகவல்களை நான் ஏன் பெறவில்லை?
Google Play Store அல்லது Apple Store ஊடாக genie APP I டவுன்லோட் செய்து, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ அல்லது #2020# ஐ டயல் செய்வதன் மூலமோ நீங்கள் சரிபார்க்கலாம்.
என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லை, எனவே இந்த அம்சத்தை செயல்படுத்த வேறு முறைகள் உள்ளதா?
வாடிக்கையாளர்கள் #2020# டயல் செய்து தங்கள் தகுதியைச் சரிபார்க்க முடியும் என்றாலும், Genie App மூலம் விண்ணப்பிக்க ஸ்மார்ட்போன் தேவை. (வழக்கமான தொலைபேசிகள் வழியாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் வரை தற்காலிக கட்டுப்பாடுகள் பொருந்தும்).
இந்த வசதியை நான் குடும்ப அங்கத்தவருக்கு அல்லது நண்பருக்கு பரிந்துரைக்கலாமா?
இல்லை. இந்த வசதி உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு மட்டுமே வழ்கப்படும்.
என்னுடைய கடன் காலம் அல்லது மீள் செலுத்தும் திட்டம் என்ன?
கடன் மீள் செலுத்தும் காலத்தை Genie App மூலம் பார்க்கலாம்.
குறைந்தளவில் முற்பணம் செலுத்த முடியுமா?
இல்லை
எனக்கு எத்தனை கடன் வசதிகள் கிடைக்கும்?
ஒரு நேரத்தில் ஒரு கடன் வசதியை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
எனது கடன் கணக்கு இலக்கத்தை நான் எப்படிக் கண்டுபிடிப்பது?
சாதனத்தை பெற்றுக்கொண்ட பின்னர் genie App இல் உள்நுழைந்து நீங்கள் சரிபார்க்கலாம்.
நான் பணம் செலுத்தியுள்ளேனா என்பதை எப்படி அறிவது? பணம் செலுத்தும் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
Genie App இல் உள்நுழையவும் - Lesi Pay என்பதைக் க்ளிக் செய்யவும் - 'Payment History' என்பதைக் க்ளிக் செய்யவும்.
நான் Lesi Pay வசதிக்கு தகுதியானவனா என்பதை எப்படி அறிவது?
  • முறை 1 - உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், Google Play Store அல்லது Apple Store ஊடாக genie App ஐ டவுன்லோட் செய்து செய்து, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
  • முறை 2 - உங்களிடம் சாதாரண தொலைபேசி இருந்தால், #2020# டயல் செய்க. தற்காலிக சிறப்பு அறிவிப்பு: வாடிக்கையாளர்கள் #2020# ஐ டயல் செய்வதன் மூலம் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம் என்றாலும், genie Aq மூலம் விண்ணப்பிக்க ஸ்மார்ட்போன் தேவை. (சாதாரண தொலைபேசி விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்படும் வரை தற்காலிக கட்டுப்பாடுகள் பொருந்தும்)
  • முறை 3 - உங்களுடைய செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையுடன் அருகிலுள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு செல்லவும். அங்குள்ள சாதன பிரதிநிதி நீங்கள் Lesi Pay வசதியைப் பெற தகுதியுடையவரா என்பதை சரிபார்ப்பார்.
ஒரு சாதனத்தை கொள்வனவு செய்ய கடன் வசதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
genie கணக்கைப் பதிவுசெய்து Loans என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

Device Loan என்பதை தேர்ந்தெடுக்கவும்

விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளவும்

சாதனத்தைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு விருப்பமான கட்டணத் திட்டத்தைத் தேர்வுசெய்யவும்

சாதனத்தை எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

சாதனத்தைப் பெற அருகிலுள்ள சேவை நிலையத்தை தேர்ந்தெடுக்கவும்

கடனை உறுதிசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

டயலொக் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறப்பது கட்டாயமாகும்

உங்களைப் பரிந்துரைத்த நபரின் விபரங்களை உள்ளிடவும்

டயலொக் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்குடன் தொடருங்கள்

தேசிய அடையாள அட்டையைப் பதிவேற்றவும்

செல்ஃபி புகைப்படத்தைப் பதிவேற்றவும்

தனிப்பட்ட தகவலை உள்ளிடவும்

தொழில் சம்பந்தமான விபரங்களை உள்ளிடவும்

பிற தகவல்களை உள்ளிடவும்

உறவினர்கள் தகவல்களை உள்ளிடவும்

தனிப்பட்ட தகவலை உள்ளிடவும்

விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுகிறது

டெபிட் கார்ட் கோரிக்கை

டெபிட் கார்ட் உறுதிப்படுத்தல்

5 நிமிடங்களுக்குள் ஒப்புதல் (டயலொக் ஃபைனான்ஸ் இடமிருந்து வாடிக்கையாளருக்கு வீடியோ அழைப்பு மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளர் தனது ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பைக் க்ளிக் செய்து சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.
நான் என்ன தகவல்களை வழங்க வேண்டும்?
  • அடையாளச் சான்று (தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்/கடவுச்சீட்டு)
  • பிரதான வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள்
  • பிரதான வாடிக்கையாளரின் செல்ஃபி புகைப்படம்
  • நிரந்தர முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்
  • தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியும் தற்போதைய குடியிருப்பு முகவரியும் வேறுபட்டால், பில் உறுதிப்படுத்தல் (மின்சாரம்/நீர் பில்) அவசியம்.
  • வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய உறவினரின் தொடர்பு விபரங்கள்.
எனது ஸ்மார்ட்போனிலிருந்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதன் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
Genie App இல் உள்நுழைவதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
நான் ஏதேனும் முற்பண தொகையை செலுத்த வேண்டுமா?
ஆம். App இல் காட்டப்பட்டுள்ள சாதனத்தின் மதிப்புக்கு ஏற்ப கட்டாய முற்பண தொகையை செலுத்த வேண்டும்.
எனக்கு கிடைக்கும் கடன் தொகையை அதிகரிக்க முடியுமா?
இல்லை. கடன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாதனத்தை கொள்வனவு நெய்வதற்கு நீங்கள் கூடுதலாக முற்பணம் செலுத்தலாம்.
எனது தற்போதைய கடன் தொகையை செலுத்திய பின்னர் எனக்கு மற்றொரு கடன் கிடைக்குமா?
உங்கள் தகுதி உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்தது. உங்கள் தகுதியைக் கண்டறிய Genie App ஐ பார்வையிடவும்.
Lesi Pay நிலுவை தொகை மற்றும் தவணை திகதியை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
genie App இல் உள்நுழைந்து -Loan என்பதை க்ளிக் செய்யவும் - Payment Outstanding க்கு செல்ல Device Loan என்பதை க்ளிக் செய்யவும்
எனது பரிவர்த்தனை விபரங்களின் அச்சிடப்பட்ட நகல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
லெசி பே முற்றிலும் டிஜிட்டல் சேவையாகும். எனவே, அச்சுப் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும், உங்கள் கடன் கணக்கு விபரங்களை Genie App மூலம் பார்வையிட முடியும்.