எங்கள் சேவைகள் பரஸ்பர நிதிகள்

உங்கள் பணத்தை அதிகரித்து, உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், எங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு தீர்வு உங்கள் முதலீடு மற்றும் செல்வ மேலாண்மை பயணத்தைத் தொடங்க ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Genie மூலம் Softlogic Money Market Fund இல் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்க Softlogic Invest உடன் நாங்கள் கூட்டிணைந்துள்ளோம். நீங்கள் ரூ.5,000 இல் இருந்து முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். குறுகிய காலத்தில் நல்ல வருமானத்தையும் எதிர்பார்க்கலாம். மேலும், எந்த நேரத்திலும் உங்கள் பணத்தை மீள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.

இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்? இப்போதே Genie App ஐ டவுன்லோட் செய்து, மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்கள் கணக்கை உருவாக்கி முதலீடு செய்யத் தொடங்குங்கள்!

தனித்துவமான நன்மைகள்
குறுகிய கால முதலீடுகளுக்கு மிகவும் பொருத்தமானது.
நீங்கள் எந்த நேரத்திலும் முதலீட்டில் இணைந்துக்கொள்ளலாம் அல்லது வெளியேறலாம்.
உங்கள் பணத்தை ஒரே இடத்தில் மட்டுமல்ல பல இடங்களில் முதலீடு செய்யலாம்.
முன்கூட்டியே வெளியேறுவதற்கு எந்த அபராதமும் அறவிடப்படமாட்டாது.
Mutual Funds என்றால் என்ன?
Mutual Funds அல்லது தொகுக்கப்பட்ட நிதிகள், தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படும் முதலீட்டு நிதிகள் ஆகும்.இங்கே பல முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைச் சேகரித்து, பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பல்வேறு முறைகளில் முதலீடு செய்கிறார்கள்.

பல வகையான பரஸ்பர நிதிகள் உள்ளன.

Money Market Funds - இவை பொதுவாக குறைந்த ஆபத்து கொண்டவை மற்றும் குறுகிய கால முதலீடுகளுக்கு ஏற்றவை.
Equity Funds - இவை அதிக ஆபத்து கொண்டவை, ஆனால் அதிக வருமானத்தையும் தரக்கூடியவை.

இந்த வகைகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த அபாயங்களையும் நன்மைகளையும் கொண்டுள்ளன.
Money Market Fund இல் முதலீடு செய்வதன் நன்மைகள்
  • அரசாங்க கருவூல உண்டியல்கள் (Government Treasury Bills) மற்றும் நிலையான வைப்புத்தொகைகள் (Fixed Deposits)போன்ற குறுகிய கால பத்திரங்கள் உட்பட பல்வேறு முதலீட்டு விருப்பங்களை நீங்கள் அணுகலாம்.
  • குறுகிய கால முதலீட்டு வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கு இவை மிகவும் பொருத்தமானவை.
  • நிலையான வைப்புத்தொகைகளை விட இவை மிகவும் நெகிழ்வானவை, மேலும் நீங்கள் எந்த நேரத்திலும் எந்த அபராதமும் இல்லாமல் நிதியிலிருந்து விலகலாம்.
  • ஒரு தகுதிவாய்ந்த நிதி முகாமையாளர் (fund manager) உங்கள் பணத்தை நிர்வகித்து, உங்களுக்கு சிறந்த வருமானத்தை வழங்க முயற்சிப்பார்.
Genie மூலம் உங்கள் முதலீடுகளை எளிதாக்குங்கள்!
  • நீங்கள் ரூ. 5,000 இல் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் விரும்பும் போதெல்லாம் மேலதிக பணத்தை முதலீடு செய்யலாம்.
  • Genie App மூலம் உங்கள் டெபிட் கார்ட் அல்லது சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தி எளிதாகப் பணம் செலுத்தலாம். (கிரெடிட் கார்ட் மற்றும் eZ cash கொடுப்பனவுகள் விரைவில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.)
  • நீங்கள் எந்த நேரத்திலும் நீங்கள் முதலீடு செய்த மூலதனத்தை மீள் பெறலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
நிதி (fund) என்றால் என்ன?
ஒரு நிதி என்பது ஒரே முதலீட்டு நோக்கத்துடன் பல முதலீட்டாளர்களால் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு கூட்டு முதலீட்டுத் தொகுப்பாகும்.இந்தப் T-bills, Fixed deposits போன்ற நிதிப் பத்திரங்களை வாங்கப் பயன்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இந்த நிதி அலகுகளை வழங்குகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை எவ்வாறு திறப்பது?
  • Google Play Store அல்லது App Store இல் Genie App ஐ டவுன்லோட் செய்க.
  • "Mutual Funds" என்பதைக் க்ளிக் செய்து பதிவு செய்வதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • நீங்கள் முதலீடு செய்தவுடன், உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டு அலகுகள் உருவாக்கப்படுவதற்கு தோராயமாக 3 வணிக நாட்கள் ஆகும்.
கணக்கைத் திறக்க என்ன ஆவணங்கள் தேவை?
  • தேசிய அடையாள அட்டையின் இருபக்கமும்.
  • உங்களுடைய சமீபத்திய புகைப்படம் (செல்ஃபி).
  • வதிவிட சான்று (விண்ணப்பத்தில் தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரியிலிருந்து வேறுபட்ட முகவரி குறிப்பிடப்பட்டால் மட்டுமே இது தேவைப்படும். 3 மாதங்களுக்குள் வழங்கப்படும் நீர் அல்லது மின்சார பில் பொருத்தமானது).
மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களுக்கு நான் எவ்வாறு பணம் செலுத்துவது?
நீங்கள் தற்போது பின்வரும் முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்:

Dialog Finance Savings Account
eZ Cash
எனது மியூச்சுவல் ஃபண்ட் கணக்குடன் தொடர்புடைய கட்டணங்கள் என்ன?
இந்தக் கட்டணங்கள் அனைத்தும் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கானது அல்ல, நிதிக்கு வசூலிக்கப்படுகின்றன. நீங்கள் பெறும் வருமானம் இந்தக் கட்டணங்களைக் கழித்த பின்னர் பெறப்படும் நிகர வருமானமாகும்.
Open-ended fund என்றால் என்ன?
Open-ended funds என்பவை முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் முதலீடுகளில் சேரவும் வெளியேறவும் கூடிய நிதிகள் ஆகும். வழங்கக்கூடிய அலகுகளின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை, மேலும் இந்த நிதிகளுக்கு காலாவதி திகதி (முதிர்வு) இல்லை.
ஏன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?
ஏனைய முதலீட்டு முறைகளுக்கு பொதுவாக அதிக அளவு பணம் தேவைப்படும் அதே வேளையில், மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ரூ.5,000 வரை முதலீடு செய்யத் தொடங்கலாம். மேலும், ஏனைய முதலீட்டாளர்களுடன் சேர்ந்து முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் பின்வரும் நன்மைகளைப் பெறுவீர்கள்:
  • பல்வகைப்படுத்தல்: நீங்கள் சொந்தமாக வாங்கக்கூடியதை விட ஒரு நிதியம் அதிக பத்திரங்களை வைத்திருக்க முடியும்.
  • தொழில்முறை முகாமை: ஒரு தொழில்முறை நிதி முகாமையாளர் உங்கள் நிதியை நிர்வகித்து முதலீடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பார்.
  • வசதி: நீங்கள் எந்த வேலை நாளிலும் நிதி அலகுகளை வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
Money Market Fund இல் எங்கு முதலீடு செய்வது?
Money Market Fund, குறுகிய கால (12 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான) நிலையான வருமானப் பத்திரங்களில் முதன்மையாக முதலீடு செய்கிறது. அவற்றில் முக்கியமானவை:
  • அரசு பத்திரங்கள்
  • கருவூல பில்கள்
  • நிலையான வைப்புத்தொகைகள்
  • வங்கி ஏற்றுக்கொள்ளல்கள் (வங்கி சான்றிதழ்கள் போன்றவை)
  • வணிக ஆவணங்கள் (பெரிய நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் சான்றிதழ்கள்)
  • பத்திரப்படுத்தப்பட்ட அறக்கட்டளைச் சான்றிதழ்கள்(Securitized trust certificates)
  • ரெப்போக்கள் மற்றும் ரிவர்ஸ் ரெப்போக்கள் (Repos and reverse repos)
இங்கே பாதுகாவலர் யார்?
Softlogic Invest - හැටන් නැෂනල් බැංකුව PLC (Hatton National Bank PLC)
Softlogic Invest - ஹட்டன் நேஷனல் வங்கி PLC (Hatton National Bank PLC)
அறங்காவலர்/பாதுகாவலர் (Trustee/Custodian fees)கட்டணங்கள் என்ன?
இவை மியூச்சுவல் ஃபண்களில் வைத்திருக்கும் சொத்துக்கள் மற்றும் பத்திரங்களின் பாதுகாப்பைப் பராமரிப்பதற்காக பாதுகாவலரால் வசூலிக்கப்படும் கட்டணங்கள். இந்தக் கட்டணம் தனிப்பட்ட முதலீட்டாளர்களால் அல்ல, நிதியத்தால் வசூலிக்கப்படுகிறது.
ஒரு நிதி அலகின் மதிப்பை எவ்வாறு கணக்கிடுவது?
இது மிகவும் எளிமையானது. ஒவ்வொரு வணிக நாளிலும், நிதியில் உள்ள அனைத்து சொத்துக்களும் சேர்க்கப்பட்டு, நிதியை இயக்கத் தேவையான நிர்வாகக் கட்டணங்கள் மற்றும் பாதுகாவலர் கட்டணங்கள் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை நிதியில் உள்ள மொத்த அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்கப்படுகிறது.

உதாரணமாக:

நீங்கள் ரூ.5,000 முதலீடு செய்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 100 வீதம் 50 யூனிட்களை வாங்கியதாக எண்ணிக்கொள்ளுங்கள். 6 வாரங்களுக்குப் பிறகு ஒரு யூனிட்டின் விலை ரூ. 110 ஆக இருந்தால்இ உங்கள் மொத்த முதலீட்டின் பெறுமதி ரூ. 5,000 லிருந்து ரூ. 5,500ஆக அதிகரிக்கும். இது நிகர சொத்து மதிப்பு (NAV) என்று அழைக்கப்படுகிறது.
Mutual Fund களில் யார் முதலீடு செய்யலாம்?
  • இலங்கையில் வசிக்கும் இலங்கை குடிமக்கள்
  • இலங்கையில் நிறுவப்பட்ட நிறுவனங்கள், பெருநிறுவனங்கள்
  • இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதிகள் மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள்.
  • வெளிநாட்டவருக்கு: இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மற்றும் இலங்கைக்கு வெளியே நிறுவப்பட்ட நிறுவனங்கள் அல்லது கூட்டுத்தாபனங்கள்
முதலீடு செய்த பணத்தை இழக்க வாய்ப்புள்ளதா?
ஒரு மியூச்சுவல் ஃபண்டில் உங்கள் முதலீட்டின் மதிப்பு, யூனிட் விலையால் தீர்மானிக்கப்படுகிறது, இது நாளுக்கு நாள் மாறுகிறது. இந்த யூனிட் விலை, நிதி முதலீடு செய்யும் பல்வேறு துறைகளின் அபாயங்களைப் பொறுத்து மாறுபடும்.

குறிப்பாக Equity Mutual Fund களில், பங்கு விலைகள் மாறும்போது, உங்கள் முதலீட்டின் மதிப்பும் மாறுகிறது.

மேலும், நிலையான வருமானப் பத்திரங்களில் முதலீடு செய்யும் நிதிகள் ஆபத்துக்கு உட்பட்டவை, மேலும் சில சந்தர்ப்பங்களில், நீங்கள் முதலீடு செய்த பணத்தில் சிலவற்றையோ அல்லது அனைத்தையும் இழக்க நேரிடும்.
அலகுகளை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும்?
முதலீடு செய்தவுடன், உங்கள் யூனிட்கள் உருவாக்கப்பட்டு உங்கள் போர்ட்ஃபோலியோவில் தோன்றுவதற்கு 3 வணிக நாட்கள் ஆகும்.
எனது பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது?
  • app இல் "Withdrawal" (மீள் பெறுதல்) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை உள்ளிடவும்.
  • "Submit" என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • உங்கள் வங்கிக் கணக்கில் நிதி வரவு வைக்க 3 வேலை நாட்கள் ஆகும்.
எனது முதலீட்டின் ஒரு பகுதியை நான் திரும்பப் பெறலாமா?
எனது முதலீட்டின் ஒரு பகுதியை நான் திரும்பப் பெறலாமா?ஆம். நீங்கள் திரும்பப் பெறக்கூடிய தொகை genie App இல் உள்ள Mutual Funds dashboard இல் “Withdraw” பக்கத்திலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதிகளுக்கான நிர்வாக கட்டமைப்பு (governance framework) என்ன?
  • பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC)
  • கஸ்டோடியன் வங்கி (HNB)
  • நிதி தணிக்கையாளர்கள் (Fund auditors)
  • CFA institute code of ethics முறைகளின்படி செயல்படும் நிதி முகாமையாளர்கள்
  • உள் இணக்கம் மற்றும் இடர் மேலாண்மை குழு