Lesi Pay

இலங்கையில் எமக்கு புதிய Smart Phone வாங்குவதற்கான இலகுவான வழி

டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி அறிமுகத்தியுள்ள உள்ள Lesi Pay உங்களுடைய அடுத்த ஸ்மார்ட்ஃபோனை மிக எளிதாகவும் விரைவாகவும் குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையில் முதன்முறையாக, நீங்கள் நாட்டின் எங்கிருந்தாலும், 12 மாதங்கள் வரையிலான எளிதான கட்டணத் திட்டத்தில், உங்களுக்கு தேவையான சமீபத்திய ஸ்மார்ட்போனை இப்போதே கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

Genie App மூலம் உங்கள் தகுதியை நிமிடங்களில் சரிபார்க்கவும். நீங்கள் தகுதி பெற்றிருந்தால், நீங்கள் விரும்பும் தொலைபேசியைத் தேர்ந்தெடுத்து, App மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம், மேலும் தொலைபேசியை உங்கள் வீட்டிற்கே வரவழைத்துக்கொள்ள முடியும்.

மேலும், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் மாதாந்த தவணைகளை Genie App மூலம் செலுத்தலாம்.

தனித்துவமான நன்மைகள்
கிரெடிட் கார்ட் தேவையில்லை
உத்தரவாதி தேவையில்லை
விரைவான ஒப்புதல்
கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை
சமீபத்திய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களைத் தேர்ந்தெடுக்கும் வசதி
உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யும் வசதி
உங்கள் கனவு ஸ்மார்ட்போனை இப்போதே உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்து, எளிதாக தவணைகளில் செலுத்துங்கள்!

LesiPay மூலம், நீங்கள் இப்போது ஒரு சிறிய முற்பணத்தை செலுத்தி,12 மாதங்கள் வரை தவணைகளில் செலுத்தலாம். மேலும் சமீபத்திய ஸ்மார்ட்போனை உங்கள் வீட்டிற்கே பாதுகாப்பாக டெலிவரி செய்துக்கொள்ளலாம்.

சமீபத்திய ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான எளிதான வழி இதுதான்:
  • 12 மாதங்கள் வரை செலுத்தலாம். கிரெடிட் கார்டுகள் அல்லது உத்தரவாதி தேவையில்லை.
  • விரைவான ஒப்புதல். உங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் முற்பணம் தவிர, கூடுதல் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
  • மறைமுக கட்டணங்கள் இல்லை: இது ஒரு எளிய, தெளிவான செயல்முறை.
இந்த மிகவும் வசதியான தவணை கட்டண முறை இலங்கையில் முதல் முறையாக Lesi Pay மூலம் உங்களுக்கு கிடைக்கிறது. இன்றே genie App ஐ டவுன்லோட் செய்து உங்கள் தகுதியைச் சரிபார்க்கவும்.
12 மாதங்களுக்கு பிறகு பழைய தொலைபேசியை மேம்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது!
நீங்கள் 15 மாதங்களுக்குள் LesiPay ஊடாக ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்கியிருந்தால், அதை புத்தம் புதிய ஸ்மார்ட்போனாக மேம்படுத்திக்கொள்ளலாம்! நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் உங்களுடைய தற்போதைய ஸ்மார்ட்போனை ஏதேனுமொரு டயலொக் சேவை நிலையத்திற்கு கொண்டு வாருங்கள், அதன் பின்னர், LesiPay இன் எளிதான கட்டண முறையைப் பயன்படுத்தி புத்தம் புதிய ஸ்மார்ட்போனுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இது இப்படி மேற்கொள்ளப்படுகின்றது:
  • உங்கள் முன்னைய தொலைபேசி தகுதியானதா என்பதை இந்த இணைப்பின் ஊடாக சரிபார்க்கவும்: https://tradeupgo.com
  • தொலைபேசி தகுதியுடையதாக இருந்தால், ஒரு வவுச்சரைப் பெற்று, Genie App மூலம் உங்கள் புதிய தொலைபேசியை முன்பதிவு செய்யுங்கள்.
  • பின்னர், நீங்கள் ஒரு டயலொக் நிலையத்திற்கு செல்லும்போது, உங்களுடைய பழைய தொலைபேசியின் பெறுமதி புதிய தொலைபேசியின் விலையிலிருந்து கழித்துக்கொள்ளப்படும்.
எனவே இது மிகவும் எளிதானது.
"Shield by ProTech" ஸ்மார்ட் போன் பாதுகாப்பு மூலம் உங்கள் தொலைபேசியைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
இலங்கையில் முதல் முறையாக!

இப்போது நீங்கள் ProTech ஆல் இயக்கப்படும் Shield மூலம் உங்கள் புதிய தொலைபேசியை பாதுகாப்பாக வைத்திருக்கலாம். உங்கள் திரை உடைந்துவிட்டாலோ அல்லது உங்கள் தொலைபேசி தற்செயலாக நனைந்தாலோ, கவலைப்பட தேவையில்லை! நாங்கள் அதை விரைவாகவும் எளிதாகவும் சரிசெய்து கொடுப்போம். இந்த Shield திட்டம் Lesi Pay மூலம் கொள்வனவு செய்யும் போன்களுக்கு மட்டுமே, மேலும் விலை நீங்கள் தெரிவு செய்யும் சாதனத்தைப் பொறுத்தது. நீங்கள் 12 மாதங்களுக்குள் ஒரு பழுதுபார்ப்பைப் பெறுவீர்கள், மேலும் நீங்கள் ரூ.2,000 என்ற சிறிய கையாளுதல் கட்டணத்தை மட்டுமே செலுத்த வேண்டும். கொள்வனவு செய்யும் போது உங்கள் தொலைபேசியை "Shield by ProTech" இல் பதிவு செய்ய மறக்காதீர்கள். ஏதாவது சேதம் ஏற்பட்டால், ஆன்லைனில் இழப்பீட்டினை கோரலாம் அல்லது ஏதேனுமொரு டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு செல்லுங்கள்.
உங்களிடம் ஸ்மார்ட்போன் இல்லையென்றால், #2020# ஐ டயல் செய்யுங்கள்.

Lesi Pay பற்றி மேலும் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்: bit.ly/LPEligibility.
உங்களுக்கு விருப்பமான மொபைல் போன் பிராண்டைக் க்ளிக் செய்து, LesiPay கடன் வசதியின் கீழ் கிடைக்கும் சமீபத்திய போன் மாடல்களைப் பார்வையிடுங்கள்.
கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய மிகக் குறைந்த நேரம் மட்டுமே தேவைப்படும். உங்கள் தேசிய அடையாள அட்டையுடன் (NIC) செல்ஃபி எடுக்கத் தயாராகுங்கள். நீங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன், genie குழு உங்கள் சேமிப்புக் கணக்கு விபரங்களை வீடியோ அழைப்பு மூலம் சரிபார்க்கும்.பின்னர், நீங்கள் Dialog Finance இடமிருந்து ஒரு ஜீனி டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை வெற்றிகரமாகப் பெறுவீர்கள்.

“கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி” என்ற காணொளியைப் பார்வையிடுங்கள்: bit.ly/LPAplyLoan
LesiPay மூலம் உங்கள் மாதாந்த தவணைகளை செலுத்துதல் இப்போது மிகவும் எளிதானது!
இனி பணம் செலுத்துவதற்காக அலையவோ வேண்டிய அவசியமோ பணம் செலுத்தும் ரசீதுகளை அனுப்ப வேண்டிய அவசியமோ இல்லை. உங்கள் பgenie Digital Savings Account, eZ Cash wallet அல்லது genie App உடன் இணைக்கப்பட்ட வேறு எந்தவொரு கட்டண முறையையும் பயன்படுத்தி எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு இடத்தில் இருந்தும் உடனடியாக தவணை கட்டணத்தை செலுத்தலாம்.

உங்கள் LesiPay சாதனக் கடனை எளிதாக எவ்வாறு செலுத்துவது என்பதை தெரிந்துக்கொள்ள எங்கள் வீடியோவைப் பாருங்கள்! bit.ly/LPLoanpay.

LesiPay கடன் ஒப்பந்தத்தை டவுன்லோட் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
LesiPay என்றால் என்ன?
LesiPay என்பது ஒரு சாதன நிதியுதவி தீர்வாகும், இது தவணை முறையில் தொலைபேசி வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோலோன் வசதியை வழங்குகிறது.
கடன் வசதிக்கான SMS தகவல்களை நான் ஏன் பெறவில்லை?
Google Play Store அல்லது Apple Store ஊடாக genie APP I டவுன்லோட் செய்து, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ அல்லது #2020# ஐ டயல் செய்வதன் மூலமோ நீங்கள் சரிபார்க்கலாம்.
என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லை, எனவே இந்த அம்சத்தை செயல்படுத்த வேறு முறைகள் உள்ளதா?
வாடிக்கையாளர்கள் #2020# டயல் செய்து தங்கள் தகுதியைச் சரிபார்க்க முடியும் என்றாலும், Genie App மூலம் விண்ணப்பிக்க ஸ்மார்ட்போன் தேவை. (வழக்கமான தொலைபேசிகள் வழியாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் வரை தற்காலிக கட்டுப்பாடுகள் பொருந்தும்).
இந்த வசதியை நான் குடும்ப அங்கத்தவருக்கு அல்லது நண்பருக்கு பரிந்துரைக்கலாமா?
இல்லை. இந்த வசதி உங்களுடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு மட்டுமே வழ்கப்படும்.
என்னுடைய கடன் காலம் அல்லது மீள் செலுத்தும் திட்டம் என்ன?
கடன் மீள் செலுத்தும் காலத்தை Genie App மூலம் பார்க்கலாம்.
குறைந்தளவில் முற்பணம் செலுத்த முடியுமா?
இல்லை
எனக்கு எத்தனை கடன் வசதிகள் கிடைக்கும்?
ஒரு நேரத்தில் ஒரு கடன் வசதியை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.
எனது கடன் கணக்கு இலக்கத்தை நான் எப்படிக் கண்டுபிடிப்பது?
சாதனத்தை பெற்றுக்கொண்ட பின்னர் genie App இல் உள்நுழைந்து நீங்கள் சரிபார்க்கலாம்.
நான் பணம் செலுத்தியுள்ளேனா என்பதை எப்படி அறிவது? பணம் செலுத்தும் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
Genie App இல் உள்நுழையவும் - Lesi Pay என்பதைக் க்ளிக் செய்யவும் - 'Payment History' என்பதைக் க்ளிக் செய்யவும்.
நான் Lesi Pay வசதிக்கு தகுதியானவனா என்பதை எப்படி அறிவது?
  • முறை 1 - உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், Google Play Store அல்லது Apple Store ஊடாக genie App ஐ டவுன்லோட் செய்து செய்து, கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
  • முறை 2 - உங்களிடம் சாதாரண தொலைபேசி இருந்தால், #2020# டயல் செய்க. தற்காலிக சிறப்பு அறிவிப்பு: வாடிக்கையாளர்கள் #2020# ஐ டயல் செய்வதன் மூலம் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம் என்றாலும், genie Aq மூலம் விண்ணப்பிக்க ஸ்மார்ட்போன் தேவை. (சாதாரண தொலைபேசி விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்படும் வரை தற்காலிக கட்டுப்பாடுகள் பொருந்தும்)
  • முறை 3 - உங்களுடைய செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையுடன் அருகிலுள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு செல்லவும். அங்குள்ள சாதன பிரதிநிதி நீங்கள் Lesi Pay வசதியைப் பெற தகுதியுடையவரா என்பதை சரிபார்ப்பார்.
ஒரு சாதனத்தை கொள்வனவு செய்ய கடன் வசதிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
genie கணக்கைப் பதிவுசெய்து Loans என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

Device Loan என்பதை தேர்ந்தெடுக்கவும்

விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளவும்

சாதனத்தைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு விருப்பமான கட்டணத் திட்டத்தைத் தேர்வுசெய்யவும்

சாதனத்தை எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

சாதனத்தைப் பெற அருகிலுள்ள சேவை நிலையத்தை தேர்ந்தெடுக்கவும்

கடனை உறுதிசெய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

டயலொக் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறப்பது கட்டாயமாகும்

உங்களைப் பரிந்துரைத்த நபரின் விபரங்களை உள்ளிடவும்

டயலொக் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்குடன் தொடருங்கள்

தேசிய அடையாள அட்டையைப் பதிவேற்றவும்

செல்ஃபி புகைப்படத்தைப் பதிவேற்றவும்

தனிப்பட்ட தகவலை உள்ளிடவும்

தொழில் சம்பந்தமான விபரங்களை உள்ளிடவும்

பிற தகவல்களை உள்ளிடவும்

உறவினர்கள் தகவல்களை உள்ளிடவும்

தனிப்பட்ட தகவலை உள்ளிடவும்

விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுகிறது

டெபிட் கார்ட் கோரிக்கை

டெபிட் கார்ட் உறுதிப்படுத்தல்

5 நிமிடங்களுக்குள் ஒப்புதல் (டயலொக் ஃபைனான்ஸ் இடமிருந்து வாடிக்கையாளருக்கு வீடியோ அழைப்பு மேற்கொள்ளப்படும். வாடிக்கையாளர் தனது ஸ்மார்ட்போனில் உள்ள இணைப்பைக் க்ளிக் செய்து சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும்.
நான் என்ன தகவல்களை வழங்க வேண்டும்?
  • அடையாளச் சான்று (தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்/கடவுச்சீட்டு)
  • பிரதான வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்கள்
  • பிரதான வாடிக்கையாளரின் செல்ஃபி புகைப்படம்
  • நிரந்தர முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம்
  • தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியும் தற்போதைய குடியிருப்பு முகவரியும் வேறுபட்டால், பில் உறுதிப்படுத்தல் (மின்சாரம்/நீர் பில்) அவசியம்.
  • வாடிக்கையாளரைத் தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய உறவினரின் தொடர்பு விபரங்கள்.
எனது ஸ்மார்ட்போனிலிருந்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதன் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
Genie App இல் உள்நுழைவதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
நான் ஏதேனும் முற்பண தொகையை செலுத்த வேண்டுமா?
ஆம். App இல் காட்டப்பட்டுள்ள சாதனத்தின் மதிப்புக்கு ஏற்ப கட்டாய முற்பண தொகையை செலுத்த வேண்டும்.
எனக்கு கிடைக்கும் கடன் தொகையை அதிகரிக்க முடியுமா?
இல்லை. கடன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாதனத்தை கொள்வனவு நெய்வதற்கு நீங்கள் கூடுதலாக முற்பணம் செலுத்தலாம்.
எனது தற்போதைய கடன் தொகையை செலுத்திய பின்னர் எனக்கு மற்றொரு கடன் கிடைக்குமா?
உங்கள் தகுதி உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்தது. உங்கள் தகுதியைக் கண்டறிய Genie App ஐ பார்வையிடவும்.
Lesi Pay நிலுவை தொகை மற்றும் தவணை திகதியை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
genie App இல் உள்நுழைந்து -Loan என்பதை க்ளிக் செய்யவும் - Payment Outstanding க்கு செல்ல Device Loan என்பதை க்ளிக் செய்யவும்
எனது பரிவர்த்தனை விபரங்களின் அச்சிடப்பட்ட நகல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
லெசி பே முற்றிலும் டிஜிட்டல் சேவையாகும். எனவே, அச்சுப் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும், உங்கள் கடன் கணக்கு விபரங்களை Genie App மூலம் பார்வையிட முடியும்.
நான் LesiPay-க்கு தகுதியானவனா என்பதை எப்படி அறிவது?
  • ஸ்மார்ட்போன் பாவணையாளர்கள்: Google Play Store அல்லது App Store ஊடாக genie App ஐ டவுன்லோட் செய்து வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • Feature Phone பாவனையாளர்கள்: உங்கள் தொலைபேசியிலிருந்து #2020# டயல் செய்து வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  • நீங்கள் சேவை நிலையத்திற்கு செல்ல வேண்டியிருந்தால்: உங்கள் தேசிய அடையாள அட்டையுடன் (NIC) அருகிலுள்ள Dialog சேவை நிலையத்திற்கு சென்று அங்குள்ள ஒரு பிரதிநிதியிடம் கேளுங்கள்.
விண்ணப்பிக்கும்போது நான் என்ன தகவல்களை வழங்க வேண்டும்?
  • ஆவணம் (தேசிய அடையாள அட்டை /சாரதி அனுமதி பத்திரம்/கடவுச்சீட்டு)
  • தனிப்பட்ட விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கம்
  • உங்கள் செல்ஃபி புகைப்படம்
  • நிரந்தர முகவரி தேவைப்பட்டால், முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் (உ-ம்: மின்சாரம்/நீர் பில் பட்டியல் )
  • அவசரகாலத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய உறவினரின் தகவல்
நான் எத்தனை கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும்?
ஒரு நேரத்தில் ஒரு Device loan க்கு மட்டுமே பெற முடியும்
எனது விண்ணப்பத்தின் நிலையை நான் எவ்வாறு சரிபார்க்க வேண்டும்?
நீங்கள் genie App இல் Log ஆகி உங்கள் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்க்கலாம்.
நான் முன்கூட்டியே ஏதாவது பணம் செலுத்த வேண்டுமா?
ஆம், நீங்கள் தேர்வு செய்யும் தொலைபேசிக்கு App இல் குறிப்பிடப்பட்டுள்ள முற்பண தொகையை செலுத்த வேண்டும்.
எனது கடன் தொகையை அதிகரிக்க முடியுமா?
இல்லை, கடன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்கள் விரும்பினால் கூடுதலாக முற்பணத்தை செலுத்தி தொலைபேசியை கொள்வனவு செய்யலாம்.
எனக்கு ஆவணங்கள் கிடைக்குமா?
LesiPay முற்றிலும் டிஜிட்டல் சேவை என்பதால், நேரடி ஆவணங்கள் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், நீங்கள் விரும்பினால், உங்கள் பரிவர்த்தனை விவரங்களை genie App மூலம் பார்க்கலாம்.
வீட்டிற்கே வரவழைத்துக்கொள்ளுதல் (Doorstep Delivery) LesiPay Doorstep Delivery என்றால் என்ன?
நீங்கள் கொள்வனவு செய்யும் தொலைபேசி, நீங்கள் இலங்கையில் எங்கிருந்தாலும் 3 வேலை நாட்களுக்குள் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும்.
ஏதேனும் டெலிவரி கட்டணங்கள் உள்ளதா?
உங்கள் ஆரம்ப கட்டணத்துடன் ரூ. 500 நிலையான கட்டணம் சேர்க்கப்படும்.
டெலிவரிக்கு கூடுதல் ஆவணங்கள் தேவையா?
இல்லை.
இந்த தொலைபேசிக்கு உத்தரவாதம் உள்ளதா?
ஆம், எல்லா தொலைபேசிகளும் TRCSL அங்கீகரித்த ஒரு வருட உத்தரவாதத்துடன் வருகின்றன.
எனது ஆர்டரை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியுமா?
genie App மூலம் ஒரு ஆர்டர் உறுதிசெய்யப்பட்டவுடன், அதை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது.
எனது ஆர்டரில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் நான் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?
நீங்கள் genie துரித இலக்கமான 076 076 0760 க்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.
‘LesiPay Device Upgrade Program’ என்றால் என்ன?
LesiPay மூலம் நீங்கள் வாங்கிய தொலைபேசியின் மதிப்பை 15 மாதங்களுக்குள் குறைப்பதன் மூலம் புதிய தொலைபேசிக்கு எளிதாக மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
எனது தொலைபேசியின் பெறுமதியை நான் எவ்வாறு தீர்மானிப்பது?
உங்கள் தொலைபேசியின் நிலை மற்றும் சந்தை தேவையைப் பொறுத்து பெறுமதி தீர்மானிக்கப்படுகிறது.
Upgrade செய்வதற்கு தொலைபேசியின் நிலை என்ன?
தொலைபேசி வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும் மற்றும் கடுமையாக சேதமடையாமல் இருக்க வேண்டும். TradeUpGo வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலதிக தகவலுக்கு நான் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?
உங்களுக்கு அருகிலுள்ள டயலொக் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்யுங்கள் அல்லது Dialog Finance வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளுங்கள்.