அதே வேளை, பின்வருவனவற்றுக்கு இணங்கி நடப்பதற்கு கடனாளி உடன்படுகின்றார்.
I. கம்பெனியில் பேணப்படும் கடனாளியின் சேமிப்புக் கணக்கிலுள்ள நிதிகளை நிறுத்தி வைக்கும் உரிமையை கம்பெனி கொண்டிருக்குமென கடனாளி உடன்படுகின்றார்.
II. இந்தக் கடன் வசதி தொடர்பில் கம்பெனியில் பேணப்படும் கடனாளியின் கடன் கணக்குக்கு பற்றுச் செய்யப்படும் பின்வரும் மற்றும் வேறெந்த கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
- 1. சாதாரண கட்டணங்களும், தண்ட வட்டியும்,
- 2. தபால் மற்றும் கையாள்கை கட்டணங்கள்,
- 3. கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் ஏனைய சமயாசமய கட்டணங்கள்,
- 4. வரிகள் அல்லது அரசினால் அல்லது மற்றெதும் சட்ட ரீதியான ஸ்தாபனத்தினால் விதிக்கப்படும் விதிப்பனவுகள்,
- 5. சட்டச் செலவினங்கள் மற்றும்,
- 6. கம்பெனிக்குச் செலுத்தப்பட வேண்டிய பணங்களை அறவிட்டுக் கொள்வதில் அதற்கேற்பட்ட மற்றெல்லா செ
III. கடனாளியினால் செலுத்தப்பட வேண்டிய செலுத்துகைகளை செலுத்துவதில் தாமதம் மற்றும் இயல்புநிலை என்பன இந்த உடன்படிக்கையின் இயல்புநிலை செலுத்துகை நியதிகள், நிபந்தனைக்கு உட்பட்டனவாகும்.
IV. பின்வரும் சந்தர்ப்பங்களின் போது கடனாளியானவர் உடனடியாக கம்பெனிக்கு அறிவிக்க வேண்டியதோடு, கம்பெனியினால் கோரப்படுமாயின், செலுத்தப்பட வேண்டிய கடன் நிலுவையை செலுத்தவும் வேண்
- வாடிக்கையாளரது நிதி நிலைமையில் ஏற்பட எதிர்பார்க்கும் அல்லது ஏற்பட்ட ஏதும் பொருள் மாற்றம்.
- வாடிக்கையாளரின் நிதி நிலைமையில் தாக்கம் செலுத்தத் தக்க மற்றும் அவர் சம்பந்தப்பட்டுள்ள ஏதும் வழக்கின் விபரங்கள்.
- வாடிக்கையாளரின் தொழில் முடிவுறுத்தல் அல்லது இராஜினாமா அல்லது அது போன்ற நிகழ்வு
V. வாடிக்கையாளருக்கு அறிவித்தலின்றி கம்பெனியானது மாற்றமுடியாத வகையில் பின்வருவனவற்றுக்கு இத்தால் அதிகாரம் உடையது –
- 1. வாடிக்கையாளரின் வேறு கணக்குகள் அல்லது வைப்பீடுகள் எல்லாவற்றுடனும் அல்லது ஏதாவதொன்றுடன் இந்த வசதியை ஒன்றிணைப்பது மற்றும்
- 2. கடனாளியின் வரவிலிருக்கும் எல்லா பணத்தையும், மட்டுப்படுத்தப்படாத அத்தகைய உரிமையையும், செலுத்துகைகள், கோரிக்கைகள் அல்லது மீளெடுத்தல் அல்லது எந்தவொரு அலுவலர் தொடர்பாகவும் அத்தகைய உரிமையை செயல்படுத்தவும், அவ்வாறு செயல்படுத்திய திகதியன்றோ அல்லது அதற்கு முன்னராக கடனாளியினால் செய்யப்பட்ட மற்றைய ஆவணங்கள் என்பனவற்றை செலுத்தாதிருப்பதன் மூலமும், செலுத்த மறுப்பதன் மூலமும் அந்த உரிமையை செயற்படுத்தவும் மற்றும் கடனாளியின் பெயரிலுள்ள ஏதும் கணக்கை முடிவுறுத்தலுமாகும். கடனாளியின் அத்தகைய செயலினால் கம்பெனி மீது ஏற்படும் எல்லா உரிமை பாராட்டுதல்களுக்கும், கோரிக்கைகளுக்கும் எதிராக கம்பெனியை இழப்பீடு செய்ய கடனாளி இத்தால் ஒப்புக் கொள்கின்றார்.
V1. ஏதும் நீதிமன்றத்தில் அல்லது நியாய சபை மற்றும் அமைப்பு அல்லது நியதிச் சட்ட உத்தயோகத்தர் முன் கம்பெனியினால் வேறேதும் ஆவணங்கள் அல்லது பற்றுச் சீட்டுக்கள் முன் வைக்கப்படாது, கம்பெனியினால் சமர்ப்பிக்கப்படும் கம்பெனியின் முறைமைகள், புத்தகங்கள் அல்லது முகமையாளரினால் அல்லது கணக்காளரினால் கையொப்பமிட்ட மற்றும்/அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றில் இருந்து பெறப்பட்ட கூற்றுக்கள் மற்றும் சாராம்சங்கள், கடனாளி கம்பெனிக்கு பொறுப்புடையவர் என்பதற்கான முடிவான அத்தாட்சியாகும்.
VII. இந்தக் கடன் தொடர்பில் கடனாளியினால் கம்பெனிக்குச் செலுத்தப்பட வேண்டிய பணங்களும் அதன் மீதான வட்டியும், காலவிதிப்பு கட்டளைச் சட்டத்தைப் (பத்தி 68) பொருட்படுத்தாது, கடனாளியிடமிரந்து அறவிடப்பட வேண்டியதோடு, குறித்த பணங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக கடனாளிக்கு எதிராக கம்பெனி வழக்கு தொடர்வதற்கு தடையாக காலவிதிப்பு கட்டளைச் சட்டத்தை (பத்தி 68) முன்வைக்க முடியாது.
VIII. கம்பெனியின் உத்தயோகத்தர்கள் அல்லது அதன் முகவர்களுக்கு மேற்கண்டவாறும் வேறெங்கும் வேறு விதமாகவும் கடனாளியினாலோ அல்லது அவரது சார்பாகவோ அவரின் முகவர்கள், பணியாளர்கள் அல்லது உத்தியோகத்தர்களினாலோ எழுத்து மூலமாவோ அல்லது வேறு விதமாகவோ செய்யப்பட்டுள்ள சகல பிரதிநிதித்துவங்களும் கூற்றுக்களும் இத்தால் உண்மையானவையெனவும், சரியானவை எனவும் கொள்ளப்படுவதோடு, அவற்றின்பால் கம்பெனி செயற்படத்தக்கவையும், குறித்த பணங்களை அறவிட்டுக் கொள்வதனால் விளையும் ஒப்பந்தத்துக்கு அடிப்படை ஆனவையும் ஆகும்.
IX. கடனாளியினால் தவறும் பட்சத்தில், நிலுவையாகவுள்ள பணத்தை அறவிடுவதற்காக மூன்றாம் தரப்பு கடன் அறவீட்டாளர் ஒருவரை நியமிப்பதற்கும், அதன் போது ஏற்படும் எல்லா செலவினங்களையும் செலுத்துவதற்கும் கடனாளி உடன்படுகின்றார்.
X. இந்த கடன் ஒப்பந்தத்துக்குப் பிரயோகமாகும் ஏதும் வட்டி வீதங்களையும், சேவைக் கட்டணங்களையும் காலத்துக்குக் காலம் அதன் தற்றுணிவின்படி கம்பெனி மாற்றுவதற்கு கடனாளி உடன்படுகின்றார். எவ்வாறெனினும், அத்தகைய மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன் கடனாளிக்கு ஏழு (07) நாட்கள் அறிவித்தல் கம்பெனியினால் வழங்கப்பட வேண்டும்.
XI. இந்த ஒப்பந்தமானது, கடனாளியினால் கம்பெனிக்கு செலுத்தப்பட வேண்டிய தொகைக்கு முதல் தோற்றச் சாட்சியாகும்.
XII. இந்த வசதி முன் கூட்டியே செலுத்தித் தீர்க்கப்படுமாயின், அதற்காக கழிவுகளைப் பெற கடனாளி உரித்துடையவராக மாட்டார்.
XIII. கம்பெனியினால் கடனாளிக்கு வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் வசதிகளின் விளைவான செலுத்தப்பட வேண்டிய நிலுவைகளின் அளவுக்கு கடனாளி எந்தக் கணக்குகளிளும் வைத்திருக்கும் அல்லது மிகுதியாக இருக்கும் (நிலையான வைப்புகள் உட்பட) எவ்வகையானதும் எத்தன்மையானதுமான வைப்புகள் மற்றும் கம்பெனியின்/அதன் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் அல்லது முகவர்கள் கொண்டுள்ள/கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஏதும் பணம், பொறுப்புக்கள், பிணைகள் மற்றும் (கடனாளி எவ்வகையிலும் மேற்கொண்டுள்ள/ மேற்கொள்ளவுள்ள ஏதும் ஒப்பந்தம் தொடர்பான) வேறும் சகல ஆதனங்கள், ஆவணங்கள், உறுதிகள் மற்றும் சொத்துகள் என்பவற்றில் இருந்தும் கழித்துக் கொள்ள கம்பெனி உரிமையுடையது. மேற்குறிப்பிடப்பட்ட ஆதனங்கள் மீது கம்பெனி உரிமை கொண்டுள்ளது என்பதை கடனாளி அறிந்துள்ளார்.
- மேற்கூறப்பட்ட உரிமைக்கும், சட்டத்தினாலோ அல்லது ஒப்பந்தத்தினாலோ அல்லது வேறு விதத்திலோ எவ்வேளையிலும் கம்பெனி கொண்டுள்ள வேறு உரிமைக்கும் மேலதிகமாக பின்வருவனவற்றுக்கும் கடனாளி கம்பெனிக்கு அதிகாரம் அளிக்கின்றார்.
- கம்பெனியில் அல்லது அதன் எந்தவொரு கிளையிலும் உள்ள கடனாளியின் எந்த கணக்கையும் பொறுப்புக்களையும் இணைக்கவும், பிணைக்கவும்.
கம்பெனி கொண்டுள்ள எந்தவொரு பிணைப் பொறுப்பையும் அல்லது ஆதனத்தையும், எவ்வகையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டியில்லாது பகிரங்க அல்லது பிரத்தியேக விற்பனை அல்லது பொறுப்புச் சாட்டுதல் அல்லது வேறு விதமாக விற்பனை செய்யவும், கைமாற்றவும், அத்தகைய விற்பனை / கைமாற்றல் / அறுதி / பொறுப்பு சாட்டுதல் என்பவற்றினால் விளையக் கூடிய செலவினங்கள் உட்பட, கடனாளியிடம் இருந்து கம்பெனிக்கு சேர வேண்டிய மொத்த தொகைகளையும் தக்க வைத்துக் கொள்ளவும்/கழி
XIV. கடனை முழுமையாகச் செலுத்தித் தீர்ப்பதற்கு முன்னதாக, கடனாளி அதன் செல்லிடத் தொலைபேசியின் உரிமையையும் மற்றும்/அல்லது அதன் சுயவிபரங்ளையும் கைமாற்றக் கூடாது.
XV. கடன் மீதான ஏதும் செலுத்தப்படாத நிலுவை தொடர்பாக கம்பெனியானது பின்வரும் உரிமைகளைக் கொண்
- நிலுவைகளை முழுமையாகச் செலுத்தும் வரை, தரகுப் பணம், கட்டணங்கள் அல்லது கடனாளிக்குச் செலுத்தப்பட வேண்டிய அத்தகைய ஏதும் செலுத்துகைகளை தடை செய்யுமாறு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு அறிவுறுத்தல் மற்றும்/ அல்லது,
- கடனாளிக்கு முன்னறிவித்தல் எதுவுமின்றி, அத்தகைய நிலுவைத் தொகைகளை கடனாளியின் eZ Cash இலுள்ள ஏதும் நிதியில் இருந்து கழிக்குமாறும், அந்த நிலுவைத் தொகைகளை கம்பெனிக்கு வரவிடுமாறும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு அறிவுறுத்தல்.
வாடிக்கையாளருக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்குவதற்காகவும் மற்றும்/அல்லது ஏதும் நிலுவைகளை அறவிட்டுக் கொள்வதற்காகவும், அதன் தரவுத் தளத்திலுள்ள/ குறிப்பான வாடிக்கையாளர் தகவலை அதனுடைய ஏதாவது துணை நிறுவனத்துடனோ மற்றும்/ அல்லது இணை நிறுவனத்துடனோ மற்றும்/ அல்லது அரச அதிகார சபையுடனோ மற்றும்/ அல்லது குற்றப் புலனாய்வு அல்லது ஏதும் குற்ற வழக்கு சம்பந்தமாகவோ பகிர்ந்து கொள்ளும் உரிமையை கம்பெனி கொண்டுள்ளது..
XVII. கம்பெனியானது, 2016, 8 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1968, 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் 39பீ(சி) இன் கீழ் இலங்கையின் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட அதிகார நிறுவனமொன்றென கடனாளி விளங்கியுள்ளார். அதற்கிணங்க, கடனாளியின் தேசிய அடையாள அட்டையின் விபரங்களையும், ஆ.தி. இல் பேணப்படும் விபரங்களையும் பெற்றுக் கொள்வதற்கும், கடனாளியின் கீழ்வரும் தகவல்கள் உட்பட அவரினால் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அதிகாரபூர்வ தன்மையை பரீட்சிப்பதற்கும் கடனாளி இத்தால் விருப்பம் தெரிவிக்கின்றார்.
- பெயர்
- விலாசம்
- பிறந்த திகதி
- பிறந்த இடம்
- பாலினம்
- வழங்கப்பட்ட திகதி
- புகைப்படம்
- அடையாள அட்டையின் முற்பக்கத்தினதும் பிற்பக்கத்தினதும் கணணிப் பிரதி
- அடையாள அட்டையின் காணப்படும் தகவலை உள்ளடக்கிய குறியீட்டின் கணணிப் பிரதி
- தகவலின் தன்மை (நடைமுறையிலுள்ளது/ நடைமுறையில் இல்லாதது/ செல்லுபடியற்றதாக்கப்பட்டது/ செல்லுபடியற்