Promotions Genie மூலம் செலவு செய்து வெல்லுங்கள் – விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

விதிமுறைகள் & நிபந்தனைகள்
  • “Genie மூலம் செலவு செய்து வெல்லுங்கள்” பிரச்சாரம் Dialog Finance PLC நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
  • இந்த பிரச்சார காலம் 2026 மே 25 முதல் 2026 மே 31 வரை(இரு தினங்களும் உள்ளடங்களாக) செல்லுபடியாகும். இந்த காலத்துக்கு வெளியே மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் இந்த சலுகைக்கு தகுதியற்றதாகும்.
  • இந்த சலுகை Genie சேமிப்பு கணக்கைப் பயன்படுத்தும் Dialog Finance PLC சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும் பொருந்தும்.
  • தகுதி பெறுவதற்காக, வாடிக்கையாளர்கள் பிரச்சார காலத்தில் Genie மூலம் குறைந்தது மூன்று (3) தகுதியான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் மொத்த பெறுமதி ரூ. 5,000 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
  • தகுதியான பரிவர்த்தனைகள் பின்வருமாறு:
    • DF Savings மூலம் Bill Payments
    • DF Savings மூலம் Reloads
    • CEFT Transfers (Out)
    • DF Savings மூலம் LankaQR Payments
    • Genie Physical அல்லது Virtual Debit Card பரிவர்த்தனைகள்
  • தகுதியான வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ. 2,500 பெறுமதியான Glomark E-Vouchers வெல்லும் வாய்ப்பு வழங்கப்படும். மொத்தம் 20 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மற்றும் பிரச்சாரத்தின் நிறைவு தேதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
  • பிரச்சார காலத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட வெற்றியாளருக்கும்/வாடிக்கையாளருக்கும் ஒரு (1) E-Voucher மட்டும் வழங்கப்படும்.
  • Dialog Finance PLC நிறுவனத்தின் ஊழியர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்க தகுதியற்றவர்கள்.
  • வெற்றியாளர்கள் Dialog Finance PLC நிறுவனத்தின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனத்தின் தீர்மானம் இறுதியும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதுமானதாகும்.
  • இந்த பிரச்சாரத்தின் கீழ் வழங்கப்படும் Glomark E-Vouchers 2026 டிசம்பர் 31 அன்று காலாவதியாகும். காலாவதியான வவுச்சர்கள் நீட்டிக்கப்படமாட்டாது, மாற்றப்படமாட்டாது அல்லது பணமாக மீட்டெடுக்கப்படமாட்டாது.
  • E-Vouchers மாற்றிக்கொடுக்க முடியாதவை, பணத்தை மீளப் பெற முடியாதவை மற்றும் பணமாக அல்லது வேறு எந்த நன்மையாகவும் மாற்றிக்கொள்ள முடியாதவை.
  • Dialog Finance PLC நிறுவனம் பரிவர்த்தனைகளின் தகுதியை சரிபார்க்கவும், மோசடி, தவறான பயன்பாடு அல்லது பிரச்சார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பங்கேற்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவும் உரிமையுடையது.
  • Dialog Finance PLC நிறுவனம் முன் அறிவிப்பின்றி எந்த நேரத்திலும் இந்த பிரச்சாரத்தையும்/அல்லது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் திருத்த, இடைநிறுத்த, வாபஸ் பெற அல்லது நிறுத்த உரிமையுடையது.
  • இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க ஒப்புக்கொள்கிறார்கள்.