“Dialog Pay வெகுமதி வாரம்” பிரச்சாரம் Dialog Finance PLC நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த பிரச்சார காலம் 2026 ஜூன் 25 முதல் 2026 ஜூன் 30 வரை (இரு தினங்களும் உள்ளடங்களாக) செல்லுபடியாகும். இந்த காலத்துக்கு வெளியே மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் இந்த சலுகைக்கு தகுதியற்றதாகும்.
இந்த சலுகை Genie சேமிப்பு கணக்கைப் பயன்படுத்தும் Dialog Finance PLC சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும் பொருந்தும்.
தகுதி பெறுவதற்காக, வாடிக்கையாளர்கள் பிரச்சார காலத்தில் Genie மூலம் குறைந்தது 02 utility பில் கட்டணங்களையும் 2 பண பரிமாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டும். அவற்றின் மொத்த பெறுமதி ரூ. 4,000 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
தகுதியான பரிவர்த்தனைகள் பின்வருமாறு:
DF Savings மூலம் Bill Payments
CEFT Transfers (Out)
தகுதியான வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ. 2,500 பெறுமதியான Glomark E-Vouchers வெல்லும் வாய்ப்பு வழங்கப்படும். மொத்தம் 20 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மற்றும் பிரச்சாரத்தின் நிறைவு தேதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
பிரச்சார காலத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட வெற்றியாளருக்கும்/வாடிக்கையாளருக்கும் ஒரு (1) E-Voucher மட்டும் வழங்கப்படும்.
Dialog Finance PLC நிறுவனத்தின் ஊழியர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்க தகுதியற்றவர்கள்.
வெற்றியாளர்கள் Dialog Finance PLC நிறுவனத்தின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனத்தின் தீர்மானம் இறுதியும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதுமானதாகும்.
இந்த பிரச்சாரத்தின் கீழ் வழங்கப்படும் Glomark E-Vouchers 2026 டிசம்பர் 31 அன்று காலாவதியாகும். காலாவதியான வவுச்சர்கள் நீட்டிக்கப்படமாட்டாது, மாற்றப்படமாட்டாது அல்லது பணமாக மீட்டெடுக்கப்படமாட்டாது.
E-Vouchers மாற்றிக்கொடுக்க முடியாதவை, பணத்தை மீளப் பெற முடியாதவை மற்றும் பணமாக அல்லது வேறு எந்த நன்மையாகவும் மாற்றிக்கொள்ள முடியாதவை.
Dialog Finance PLC நிறுவனம் பரிவர்த்தனைகளின் தகுதியை சரிபார்க்கவும், மோசடி, தவறான பயன்பாடு அல்லது பிரச்சார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பங்கேற்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவும் உரிமையுடையது.
Dialog Finance PLC நிறுவனம் முன் அறிவிப்பின்றி எந்த நேரத்திலும் இந்த பிரச்சாரத்தையும்/அல்லது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் திருத்த, இடைநிறுத்த, வாபஸ் பெற அல்லது நிறுத்த உரிமையுடையது.
இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க ஒப்புக்கொள்கிறார்கள்.