சேமிப்பு கணக்கு

டயலொக் ஃபைனான்ஸ்* டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகளில் பரிவர்த்தனைகளை உங்கள் விரல் நுனியில் மேற்கொள்ள முடியும். உங்கள் சேமிப்பில் கவர்ச்சிகரமான வட்டியை பெற்றுக்கொள்ளும் போது பில்களை செலுத்துதல், LANKAQR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்துதல், LankaPay செயல்படுத்தப்பட்ட எந்த டெபிட் கார்டிலிருந்தும் பணத்தை எடுத்தல், ஏனைய வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுதல் போன்வற்றை இலகுவாக மேற்கொள்ள முடியும்.

பதிவு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி எளிதாகக் கணக்குகளைத் திறக்க இது உங்களை அனுமதிக்கிறது, எனவே நீங்கள் இதுவரை அனுபவித்திராத இலகுவான கணக்குத் திறப்பு செயல்முறையாக இது இருக்கும்.

Key Features
ஆன்லைனில் கணக்குகளைத் திறத்தல்
விரைவான பணப் பரிமாற்றங்கள்
LankaPay வசதியுடன் கூடிய ATM அட்டைகள் மூலம் ATMகளில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் திறன்
Genie App இன் மூலம் ATM அட்டைகளைக் கையாளும் திறன்
எளிதாக பணம் செலுத்துங்கள்
  • Genie இல் பதிவுசெய்யப்பட்ட வணிகர்களுக்கு பணம் செலுத்துங்கள்
  • விற்பனை வளாகத்தில் LANKAQR ஐ ஸ்கேன் செய்து உங்கள் கணக்கிலிருந்து நேரடியாக பணம் செலுத்துங்கள்
  • மற்றும் மொபைல் தொலைபேசி பில்களை எளிதாக செலுத்துங்கள்
பண பரிவர்த்தனைகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளுங்கள்
  • எந்த முறையிலும் கணக்கிலிருந்தும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்
  • கணக்கிலிருந்து வேறு எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணத்தை மாற்றலாம்
  • பணத்தை நம்பிக்கையுடனும் பாதுகாப்பாகவும் சேமித்திடுங்கள்
  • இலங்கை நாணய வாரியத்தால் இயக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு வைப்பாளருக்கும் அதிகபட்சமாக ரூ. 1,100,000 வரை வைப்புத்தொகை காப்பீடு செய்யப்படுகிறது.
உங்கள் ஏடிஎம் கார்டை நிர்வகிக்கவும்
  • LankaPay வசதி உள்ள எந்தவொரு ATM இலும் பணத்தை எடுக்க உங்கள் ATM அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம்
  • Genie App ஊடாக, புதிய அட்டையைக் கோரலாம், உங்கள் PIN ஐ புதுப்பிக்கலாம் அல்லது உங்கள் அட்டையை ரத்து செய்யலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
டயலொக் பைனான்ஸ் சேமிப்பு என்றால் என்ன?
இது ஒரு புதுமையான டிஜிட்டல் சேமிப்பு தீர்வாகும், இது உங்கள் பணத்தை எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு இடத்தில் இருந்தும் நேரடியாக உங்கள் மொபைல் தொலைபேசியின் ஊடாக அணுக அனுமதிக்கிறது.
டயலொக் பைனான்ஸ் சேமிப்புக் கணக்கை எவ்வாறு திறப்பது?
  • Google Store அல்லது Apple Store ஊடாக genie App ஐ டவுன்லோட் செய்யவும்
  • 'Open a Savings Account' என்பதைக் க்ளிக் செய்து வழிமுறைகளைப் பின்பற்றவும்.
எனது டயலொக் பைனான்ஸ் கணக்கில் பணத்தை எவ்வாறு வைப்பு செய்வது?
  • சேமிப்புக் கணக்கு மிகுதிக்கு கீழே உள்ள 'Add Money' என்பதைக் க்ளிக் செய்வதன் மூலம், Just Pay தெரிவின் மூலம் உங்கள் பிற வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மாற்றலாம்.
  • பணத்தை மாற்றும்போது பொருந்தக்கூடிய கட்டணங்களுக்கு (https://www.dialogfinance.lk/docviewer?id=genierates) க்கு செல்க:
டயலொக் பைனான்ஸ் சேமிப்புக் கணக்கின் சிறப்பம்சங்கள் என்ன?
  • Just Pay தெரிவின் மூலம் பிற வங்கிகளில் இருந்து பணத்தை மாற்றும் திறன்
  • சேமிப்பு கணக்கு மூலம் பில்களை செலுத்தும் திறன்
  • ATM அட்டையைக் கோரும் மற்றும் கையாளும் திறன்
  • சேமிப்புக் கணக்குகள் மூலம் QR/OTC பணம் செலுத்தும் திறன்
  • டயலொக் பைனான்ஸ் கணக்கிற்கோ அல்லது வேறு வங்கிக் கணக்கிற்கோ பணத்தை மாற்றவும்
  • உங்கள் பரிவர்த்தனை விபரங்களைப் பார்வையிடவும்
  • ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குகளை இணைத்து genie App இன் நன்மைகளை அனுபவித்திடலாம்.
தினசரி பணம் எடுக்கும் வரம்பு என்ன?
  • ATM களில் இருந்து ஒரு நாளைக்கு ரூ.50,000 வையும்
  • ஏனைய வங்கிகளிலிருந்து ஒரு நாளைக்கு ரூ. 250,000 பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
  • டயலொக் ஃபைனான்ஸ் கணக்கிலிருந்து டயலொக் ஃபைனான்ஸ் கணக்கிற்கு ​​ஒரு முறை ரூ. 1,000,000 மட்டுமே மாற்ற முடியும்.
எனக்குத் தேவைப்படும் போதெல்லாம் எனது மின்-அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகலை என்னால் பெற்றுக்கொள்ள முடியுமா? எப்படி?
ஆம். சான்றளிக்கப்பட்ட கணக்கு அறிக்கையைப் பெற வாடிக்கையாளர் டயலொக் பைனான்ஸ் கிளைக்கு செல்ல வேண்டும்.
எனது டயலொக் ஃபைனான்ஸ் சேமிப்பிற்கு எப்போது வட்டி வழங்கப்படும்?
வைப்பு செய்யப்பட்ட நாளிலிருந்து
இந்த சேமிப்புக் கணக்கிற்கு ஏதேனும் கட்டணங்கள் உள்ளதா?
சேமிப்புக்கான கட்டணங்கள்: https://bit.ly/3P8PO7E
நான் ஒரு கூட்டுக் (இணைந்த) கணக்கைத் திறக்கலாமா?
தற்போது இது சாத்தியமில்லை. நீங்கள் ஒரு தனி நபராக டயலொக் பைனான்ஸ் சேமிப்புக் கணக்கை மட்டுமே திறக்க முடியும்.
App மூலம் ATM கார்டை எவ்வாறு கோருவது?
  • 'Open a Savings Account' என்பதைக் க்ளிக் செய்யவும்
  • 'Get Your ATM Card' என்பதைக் க்ளிக் செய்யவும்
  • ‘I need a Dialog Finance ATM card’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • ATM கார்டை எப்படிப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும்.
எனது PIN ஐ எவ்வாறு புதுப்பிப்பது?
  • ‘Open a Savings Account’ என்பதைக் க்ளிக் செய்யவும்
  • ‘Manage ATM card’ என்பதைக் க்ளிக் செய்யவும்.
டயலொக் பைனான்ஸ் சேமிப்பு கணக்கைத் திறக்க அவசியமான ஆவணங்கள் என்ன?
  • செல்லுபடியாகும் அடையாளச் சான்று (தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதி பத்திரம்/கடவுச்சீட்டு)
  • மேலே உள்ள அடையாள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலிருந்து தற்போதைய குடியிருப்பு முகவரி வேறுபட்டால், கடந்த 03 மாதங்களுக்கான பின்வரும் பில் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
  • சாரதி அனுமதி பத்திரம்
  • பாவனை பில் ரசீதுகள் (மொபைல் தொலைபேசி பில்கள் தவிர)
  • வங்கி அறிக்கை / வங்கி புத்தகம்
  • அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனத்திடமிருந்து கடிதம்
  • வாடகை ஒப்பந்தம்
  • வருமான வரி ரசீது/மதிப்பீட்டு அறிவிப்பு
எனது கணக்கு மிகுதியை எவ்வாறு சரிபார்ப்பது?
genie App இல் உள்நுழைந்து சேமிப்புக் கணக்கு தகவல் பக்கத்தைப் பார்க்கவும்.
டயலொக் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறக்கத் தேவையான குறைந்தபட்ச வைப்புத் தொகை என்ன?
டயலொக் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறக்க குறைந்தபட்ச வைப்புத் தொகை எதுவும் தேவையில்லை.
எனது பரிவர்த்தனைகளுக்கு அச்சிடப்பட்ட அறிக்கையைப் பெற முடியுமா?
இல்லை. ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் உங்களுக்கு ஒரு மின்-அறிக்கை அனுப்பப்படும்
இந்த சேவைக்கு எவ்வளவு வட்டி?
  • நீங்கள் வருடாந்த வட்டி விகிதத்தை 4.50% பெறுவீர்கள். (நிறுவனம் எந்த நேரத்திலும் விதிமுறைகளின்படி அல்லது நிறுவனத்தின் விருப்பப்படி வட்டி விகிதத்தை மாற்றும் உரிமையை கொண்டுள்ளது).
  • வட்டி விகிதங்களுக்கு: இங்கே க்ளிக் செய்யவும்
எனது டயலொக் ஃபைனான்ஸ் சேமிப்புக் கணக்கிற்கான வட்டியை எவ்வாறு கணக்கிடுவது?
மாத இறுதியில் மிகுதிக்கு தினசரி வட்டி கணக்கிடப்படும். வட்டி ஒவ்வொரு மாதமும் 25 ஆம் திகதி வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
குறைந்தபட்ச கணக்கு மிகுதியை பராமரிப்பது அவசியமா?
வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ரூ.15,000 மிகுதி தொகையைப் பராமரிக்க வேண்டும்.
ATM கட்டணங்கள் என்ன?
  • ஏனைய வங்கிகளின் யுவுஆ களில் இருந்து பணம் எடுப்பதற்கு ரூ.25
  • மிகுதி விபரங்களுக்கு ரூ. 7.50
எனது சேமிப்புக் கணக்குடன் எனது அட்டையை எவ்வாறு இணைப்பது?
  • 'Open a Savings Account' என்பதைக் க்ளிக் செய்யவும்
  • ‘Get your ATM card’ என்பதைக் க்ளிக் செய்யவும்.
  • ‘I already have a Dialog Finance ATM card’ தெரிவு செய்க
  • உங்கள் 19 இலக்க ATM கார்ட் எண்ணை உள்ளிடவும்.
  • OTP எண்ணை சரிபார்க்கவும்
  • உங்கள் சேமிப்புக் கணக்கு விபரங்களை உறுதிப்படுத்தவும்.
  • 4 இலக்க PIN எண்ணை உள்ளிடவும்.
*1981 நவம்பர் 25 ஆம் திகதி நிறுவப்பட்ட டயலொக் ஃபைனான்ஸ் பிஎல்சி, ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்காவால் AA(lka) என மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதிச் சேவைகள் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தால் உரிமம் பெற்றது.