Savings Pockets

Savings Pockets என்பது உங்கள் பணத்தை நிர்வகிக்கவும் நிதி நிலையை மேம்படுத்தவும் உதவும் மிக எளிய வழியாகும். இந்த முறையில், உங்கள் வருமானத்தை வெவ்வேறு தேவைகளுக்கு தனித்தனி ‘பாக்கெட்டுகளில்’ வைப்பதன் மூலம் எளிதாக சேமிக்கலாம்.

நீங்கள் இதுபோன்ற 7 ‘பாக்கெட்டுகளை’ உருவாக்கலாம். வீட்டு வாடகை, கார் பராமரிப்பு, கல்வி கட்டணம், விடுமுறைகள், மருத்துவ அவசரநிலைகள் அல்லது வேறு ஏதேனும் சிறப்பு நோக்கங்களுக்காக ஒரு தனி பாக்கெட்டை ஒதுக்கி வைக்கவும்.

நிதி ஒழுக்கம் என்பது ஒரு இடத்தில் நிற்பதல்ல, அது ஒரு நிலையான பயணம். இந்த முறையின் மூலம், உங்கள் பணத்தின் மீது நீங்கள் கட்டுப்பாட்டைப் பெறுவீர்கள்.

கூறுகள்
7 பாக்கெட்டுகள் வரை உருவாக்கும் திறன்.
பாக்கெட்டுகளுக்கு உங்கள் விருப்பப்படி ஒரு பெயரைக் கொடுக்கும் திறன்.
உங்கள் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் திறன்.
உங்கள் நோக்கத்திற்காக பணத்தைப் பயன்படுத்தும் திறன்.
பணத்தை சேர்த்தல்:
உங்கள் genie Digital Savings கணக்கிலிருந்து மட்டுமே உங்கள் Savings Pockets க்கு பணத்தைச் சேர்க்க முடியும்..
பணத்தைப் பயன்படுத்துதல்
ஒரு குறிப்பிட்ட தேவைக்காக உங்களுக்கு பணம் தேவைப்படும்போது, தொடர்புடைய Savings Pocket இல் உள்ள பணத்தை உங்கள் genie Digital Savings கணக்கிற்கு மாற்றலாம், பின்னர் அந்தக் கணக்கின் மூலம் அதைச் செலவிடலாம்.
கட்டுப்பாடுகள்
உங்கள் சேமிப்பை அவற்றின் நோக்கத்திற்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க, Savings Pockets களில் இருந்து நேரடியாக மற்ற வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றவோ, QR பணம் செலுத்தவோ,genie டெபிட் கார்டைப் பயன்படுத்தவோ அல்லது ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவோ முடியாது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
Savings Pockets என்றால் என்ன?
இது உங்கள் மாதாந்த நிதித் தேவைகளைக் கண்டறிந்து, அவற்றிற்கு முன்கூட்டியே தயாராவதற்கு உதவும் ஒரு வழியாகும். இது திடீர் நிதிப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. இதுபோன்ற 7 பாக்கெட்டுகள் வரை நீங்கள் உருவாக்கலாம்.
Savings Pocket இல் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்குமா?
ஆம். உங்கள்genie Digital Savings கணக்கில் நீங்கள் பெறும் அதே வட்டி விகிதம் உங்கள் Savings Pockets களில் உள்ள பணத்திற்கும் பொருந்தும்.
Savings Pocket ஐ எப்படி உருவாக்குவது?
genie App இல் Savings -> Pockets -> Get Started க்கு சென்று, விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு, உங்கள் பாக்கெட்டுக்கான பெயரையும் தொகையையும் உள்ளிட்டு உறுதிப்படுத்தவும் (Submit).
Savings Pocket ஐ நான் மூடலாமா?
ஆம், genie App இல் உள்ள "Manage Pocket" விருப்பத்தின் ஊடாக நீங்கள் எந்தவொரு நேரத்திலும் நீங்கள் அதைச் செய்யலாம்.
வியாபார நிலையங்களுக்கு பணம் செலுத்துதல், பில் செலுத்துதல் போன்றவற்றைச் செய்ய முடியுமா?
இல்லை. உங்கள் genie Digital Savings கணக்கில் இருந்து மட்டுமே பணத்தை எடுக்க முடியும்..
ஏதேனும் கட்டணங்கள் அல்லது வரிகள் உள்ளதா?
இந்தச் சேவைக்கு எந்தக் கட்டணமும் இல்லை. இருப்பினும், வட்டி வருமானத்தின் மீது முற்பண தனிநபர் வருமான வரி (Advance Personal Income Tax) விதிக்கப்படுகிறது.
ஒரு Pocket ஐ உருவாக்கிய பிறகு அதன் பெயரை மாற்ற முடியுமா?
இல்லை. பெயரை மாற்ற விரும்பினால், ஏற்கனவே உள்ள Pocket ஐ மூடிவிட்டு புதிய ஒன்றை உருவாக்க வேண்டும்.
உருவாக்கக்கூடிய அதிகபட்ச Savings Pockets களின் எண்ணிக்கை எத்தனை?
தற்போது, 7 Pockets வரை உருவாக்க முடியும்.
ஒரு நாளைக்கு எத்தனை Savings Pockets களை மூட முடியும்?
தற்போது, ஒரு நாளைக்கு 5 Pocket கள் வரை மூட முடியும்..
Pocket இல் பணத்தை இணைக்கும் போது குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வரம்பு ஏதும் உள்ளதா?
ஆம், குறைந்தபட்ச தொகை ரூ. 1.00. அதிகபட்ச தொகை உங்கள் genie Digital Savings கணக்கில் உள்ள மிகுதி தொகையாகும்.
Pocket இல் இருந்து பணத்தை மாற்றுவதற்கு குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வரம்பு ஏதும் உள்ளதா?
ஆம். நீங்கள் Pocket இல் குறைந்தபட்சம் ரூ.100.00 மிகுதி தொகையை வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள தொகையை உங்கள் genie Digital Saver கணக்கிற்கு மாற்றலாம்.
Pocket ஐ மூடும்போது மிகுதி தொகை மீதமாக இருந்தால் என்ன நடக்கும்?
மீதமுள்ள தொகை தன்னியக்கமாக உங்கள் genie Digital Saver கணக்கில் வரவு வைக்கப்படும்.