இலக்கு அடிப்படையிலான சேமிப்பு

Genie மூலம், இப்போது நீங்கள் விரும்பும் எந்தத் தொகையையும், உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப, எத்தனை முறை வேண்டுமானாலும் சேமிக்கலாம். எங்கள் இலக்கு அடிப்படையிலான சேமிப்புத் திட்டங்கள் மூலம், உங்கள் இறுதி சேமிப்பு இலக்கை அடிப்படையாகக் கொண்டு, மாதாந்தம் சேமிக்க விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுக்கும் திறன் உங்களுக்கு உள்ளது.மேலும், உங்கள் வசதிக்கேற்ப பணம் செலுத்தும் திகதி மற்றும் சேமிப்பு காலத்தைத் தேர்வுசெய்ய உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.எனவே, இன்றே உங்கள் சேமிப்புப் பயணத்தைத் தொடங்கி, உங்கள் மொபைல் திரையில் ஒரே க்ளிக்கில் உங்கள் நிதி இலக்குகளை அடையுங்கள்.

முக்கிய நன்மைகள்
நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு அமைய சேமிக்கலாம்.
உங்கள் சேமிப்பில் கவர்ச்சிகரமான வருமானத்தைப் பெறுங்கள்.
உங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்யுங்கள்: உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்
உங்கள் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு இலவச சேமிப்புக் கணக்கைப் பெறுங்கள்.
உங்கள் பணத்தை நிர்வகிப்பது குறித்த முடிவுகளை நீங்களே எடுக்கலாம்.
  • நீங்கள் விரும்பும் அளவுக்கு சேமிக்கவும்: மாதத்திற்கு ரூ. 100.00 உடன் சேமிக்கத் தொடங்குங்கள்.
  • நீங்கள் விரும்பும் காலத்திற்கு சேமிக்கவும்: உங்கள் இலக்குகளைப் பொறுத்து ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சேமிப்புத் திட்டங்களிலிருந்து தேர்வு செய்யவும்.
தினசரி பரிவர்த்தனைகளுக்கு இலவச சேமிப்புக் கணக்கைப் பெறுங்கள்
  • நீங்கள் ஒரு இலக்கு அடிப்படையிலான சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கும்போது, உங்களுக்கு இலவச Dialog Finance சேமிப்புக் கணக்கு கிடைக்கும்.
  • இந்த சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தி, பில்கள் செலுத்துதல், பணம் எடுத்தல் அல்லது பணப் பரிமாற்றங்கள் செய்வது என அனைத்தையும் மேற்கொள்ளலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
இலக்கு அடிப்படையிலான சேமிப்பு (Goal-based savings) என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் சேமிப்பு இலக்கை அடைய ஒரு நிலையான மாதாந்த தொகையை சேமிப்பது என்பதாகும்.
இலக்கு சேமிப்புத் திட்டத்தின் அம்சங்கள் என்ன?
  • நீங்கள் விரும்பும் இறுதி சேமிப்பு பெறுமதியையோ அல்லது மாதாந்தம் சேமிக்க விரும்பும் தொகையையோ தேர்வு செய்யலாம்.
  • உங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்பும் திகதியை நீங்கள் தேர்வு செய்யலாம்.
  • காலவரையறை இல்லை. 12 முதல் 60 மாதங்களுக்கு இடைப்பட்ட எந்த கால அளவையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
  • குறைந்தபட்ச மாதாந்த தவணை ரூ.100/-இலிருந்து தொடங்குகிறது.
  • இலக்கு அடிப்படையிலான சேமிப்புக் கணக்கில், தினசரி பரிவர்த்தனைகளுக்கு இலவச சேமிப்புக் கணக்கைப் பெறுவீர்கள்.
  • நீங்கள் சாதாரண வட்டி விகிதத்தை விட அதிக வட்டி விகிதத்தைப் பெறலாம்.
முதலீட்டுத் திட்டத்தில் பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது?
கணக்கில் மாதாந்த தவணையை வைப்பு செய்யலாம்.பின்னர், நிலையான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் பிரீமியம் தொகை உங்கள் இலக்கு அடிப்படையிலான சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தக் கணக்கில் நேரடியாகவோ அல்லது CEFT மூலமாகவோ பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
முதிர்ச்சிக்கு முன் (pre-mature closure) கணக்கை மூட முடியுமா?
ஆம், நீங்கள் financial.services@dialog.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு கோரிக்கையை அனுப்பலாம்.டயலொக் ஃபைனான்ஸ் பொருந்தக்கூடிய அபராத வட்டி விகிதத்தை கணக்கிற்குப் பயன்படுத்தி, மீதமுள்ள தொகையை உங்கள் தினசரி சேமிப்புக் கணக்கிற்கு மாற்றும்.
முன்கூட்டியே மூடப்படும் கணக்குகளுக்கான அபராத வட்டி விகிதம் என்ன?
வழக்கமான சேமிப்பிற்கான வட்டி விகிதம் பொருந்தக்கூடிய அபராத வட்டி விகிதமாகும்.
இந்தக் கணக்கின் முக்கிய விதிமுறைகள் என்ன?
நீங்கள் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு உங்கள் மாதாந்த தவணையை வைப்பு செய்யத் தவறினால், ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி உங்கள் கணக்கு ரத்து செய்யப்படும். நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அபராத வட்டி விகிதமும் வசூலிக்கப்படும். கணக்கு ரத்து செய்யப்பட்ட பிறகு, மீதமுள்ள தொகை உங்கள் தினசரி பரிவர்த்தனை சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
காலக்கெடுவின் முடிவில் நான் எப்படி பணம் பெறுவது?
காலத்தின் முடிவில், உங்கள் சேமிப்புத் தொகை உங்கள் தினசரி பரிவர்த்தனை சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
முதலீட்டுத் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது?
பணம் செலுத்தும் திகதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ உங்கள் தினசரி சேமிப்புக் கணக்கில் மாதாந்த தவணையை வைப்பு செய்யலாம்.பின்னர், நிலையான அறிவுறுத்தலின் படி, தொகை தானாகவே உங்கள் இலக்கு சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தக் கணக்கில் நேரடியாகவோ அல்லது CEFT மூலமாகவோ பணத்தை வைப்பு செய்ய முடியாது.