LESI PAY கடன் ஒப்பந்தம்

அறிமுகம்
1.1.கம்பெனியினால் அங்கீகரிக்கப்படுவதனைத் தொடர்ந்து, இந்த நியதிகளும் நிபந்தனைகளும், (இதன் பின்னர் இதனகத்தே, இங்கு உபயோகிக்கப்படும் விதத்திலும், சந்தர்ப்ப சூழல் கோரும் அல்லது அர்த்தம் கொள்ளும் வகையிலும் டயலொக் பினான்ஸ் பிஎல்சி ஐயும், அதன் பின்னுரித்தாளிகள் மற்றும் சாட்டுதல் பெறுநர்களையும் உள்ளடக்கிதாக ‘DF’ அல்லது ‘கம்பெனி’ என்றழைக்கப்படும்) 2007, இல.7 கம்பெனிகள் சட்டத்தின் கீழ் (கம்பெனி பதிவு இல. PB765 PQ) முறையாக கூட்டிணைக்கப்பட்டதும், கொழும்பு 02, யூனியன் இடம், இல.475 இல் அதன் பதிவு செய்யப்பட்ட காரியாலயத்தைக் கொண்டதுமான டயலொக் பினான்ஸ் பிஎல்சி இனால் (‘கடனாளி’ ஆகிய தங்ளுக்கு வழங்கப்படும் LESI PAY கடன் வசதிக்கு பிரயோகமாவனவாகும்.

1.2.‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ (KYC) செயன்முறையை சாதகமாகப் பூர்த்தி செய்த பின்னர், கடனாளி முற்பணத்தை/முழுத் தொகையையும் செலுத்துவதன் பேரில், கம்பெனியின் ஏகத் தற்றுணிவின்படியும், டயலொக் எக்ஸியாட்டா பிஎல்சி மற்றும் அல்லது அதன் ஏதும் நேரடி அல்லது மறைமுக துணை ஸ்தாபனங்களின் மூலமாகவோ அல்லது இந்த வசதியை வழங்கும் டயலொக் குழுமத்தோடு பங்காண்மை கொண்டிருக்கும் வேறு ஸ்தாபனமொன்றின் மூலமாகவோ வசதி (‘கொள்வனவு செய்த வசதி) ஒன்றை கம்பெனியானது வழங்கும். வசதியின் பேரில் நிலுவையாகவுள்ள தொகை கம்பெனியினால் கடனாக/வசதியாக வழங்கப்படுவதோடு, அத்தகைய கடனை/வசதியை கடனாளி தவணை முறை மூலமாக செலுத்தி முடிக்க வேண்டும்.

1.3.வசதியின் விபரங்கள், கடனாளியினால் மொத்தமாகச் செலுத்தப்படும் தொகை, மொத்தக் கடன், கடன் காலம், தவணைகளின் எண்ணிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கடனாளிக்கு வழங்கப்படும் வழங்கல் கடிதம்/ உற்பத்திக் கூற்றில் குறிப்பிடப்படும் அல்லது கம்பெனியினால் வழங்கப்படும் ஏதாவது நிகழ்நிலை வசதியொன்றில் பார்வையிடக் கூடியதாக வசதி செய்யப்படும்.
பணம் வழங்குதல்
2.1.(ஏதும்) வசதியின்​ பொருட்டு, அவசியமாகும் முழுத் தொகையையும் கடனாளி செலுத்தும் பட்சத்தில், DF ஆனது, வழங்கல் கடிதத்தில் / உற்பத்திக் கூற்றில் விபரிக்கப்படும் குறித்த கடன் வசதியை வட்டியுன் சேர்த்து வழங்க வேண்டும். கொடுக்கப்படும் காலவிடையொன்றின் போது நிலவும் சந்தை ஏற்ற இறக்கத்தைக் கவனத்தில் கொண்டு எழுத்து மூலமாக வட்டி விகிதம் கடனாளிக்கு அறவிக்கப்படும். கடன் பணமானது, வசதி வழங்கும் ஸ்தாபனத்துக்கு விநியோகிக்கப்படும். கடன் வழங்கப்பட்ட நாளில் இருந்து, வழங்கல் கடிதத்தில் / உற்பத்திக் கூற்றில் குறிக்கப்பட்ட காலவிடைக்குள் கடனாளி குறித்த கடனை மீளச் செலுத்த வேண்டும். மீளச் செலுத்தல் தவறுமேயானால், முழுத் தொகையையும் செலுத்தித் தீர்க்கும் வரை மேலதிக வருட வட்டி அறவிடப்படும்.

2.2. இரு தரப்பினருக்கிடையேயான மாற்றமான எந்த ஏற்பாட்டையும் அல்லது எழுத்து மூலத்தையும் கருத்திற் கொள்ளாது, மேற்குறிப்பிட்ட தொகையையும் பத்தி 3 (செலுத்துகைகள்) இல் குறிப்பிடப்படும் மற்றைய எல்லா கட்டணங்களையும் DF இன் கோரிக்கையின் பேரில் செலுத்துவதற்கு இத்தால் கடனாளி வெளிப்படையாக உடன்படுகின்றார். கோரப்படுமிடத்து, தவணை முறையில் மீளச் செலுத்துவதற்காக கடனாளிக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும், மீள் செலுத்தல் என்னும் அடிப்படைக் கடப்பாட்டுக்கு உட்பட்டவையாகும்.

2.3. DF இன் முறைமைகள், புத்தகங்கள் அல்லது DF இனால் அதிகாரமளிக்கப்பட்ட யாரும் அலுவலர் ஒருவரினால் கையொப்பமிட்ட மற்றும்/அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட கூற்றுக்கள் மற்றும் சாராம்சங்களில் காண்பிக்கப்படும் இதன் கீழ் கடனாளியினால் DF க்கு கடனாக உள்ள பணங்களுக்கும், அவற்றை ஆதாரப் படுத்துவதற்கும், வேறு ஆவணங்களும் பற்றுச் சீட்டுகளும் இல்லாதிருப்பினும், சட்ட ரீதியானவையும் தீர்க்கமானவையும் எனவும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவை கடனாளியினால் செலுத்தப்பட வேண்டியவை எனவும் கடனாளிக்கு எதிரான ஆதாரங்கள் எனவும் கடனாளி ஏற்றுக் கொள்கின்றார்.
செலுத்துகைகள்
3.1.கடனாளியானவர், பின்வரும் மற்றும் வேறெந்த கட்டணங்களையும் செலுத்த வேண்டும். இவை, இந்தக் கடன் வசதி தொடர்பில் DF இல் பேணப்படும் கடனாளியின் சேமிப்புக் கணக்கு ஊடாக கடனாளியின் கடன் கணக்குக்கு பற்றுச் செய்யப்படும். மிகுதிப் பணம் அடிப்படை தொகைக்கு கொண்டு செல்லப்படும்.
  • 3.1.1. சாதாரண கட்டணங்களும், தண்ட வட்டியும்,
  • 3.1.2. தபால் மற்றும் கையாள்கை கட்டணங்கள்,
  • 3.1.3. கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் ஏனைய சமயாசமய கட்டணங்கள்,
  • 3.1.4. வரிகள் அல்லது அரசினால் அல்லது மற்றேதும் சட்ட ரீதியான ஸ்தாபனத்தினால் விதிக்கப்படும் விதிப்பனவுகள்,
  • 3.1.5. சட்டச் செலவினங்கள் மற்றும்,
  • 3.1.6. கம்பெனிக்குச் செலுத்தப்பட வேண்டிய பணங்களை அறவிட்டுக் கொள்வதில் அதற்கேற்பட்ட மற்றெல்லா செலவினங்களும்.
3.2. கடனாளியினால் செலுத்தப்பட வேண்டிய செலுத்துகைகளை செலுத்துவதில் கால தாமதம் மற்றும் தவறு என்பன இந்த உடன்படிக்கையின் தவறிய செலுத்துகை நியதிகள், நிபந்தனைக்கு உட்பட்டனவகும்.
சாதனத்தைத் தடுக்கும் அம்சம் மற்றும் பாதுகாப்பு
4.1.சாதனக் கடன் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை, கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தின் உரிமை நிறுவனம் வசம் இருக்கும் என்பதை கடன் வாங்குபவர் ஒப்புக்கொள்கிறார்.

4.2 இந்தக் கடன் ஒப்பந்தத்திற்கான கடன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வழங்கல் கடிதம்/உற்பத்தி அறிக்கை மூலம் நிறுவனம் கடனாளிக்கு உறுதிப்படுத்தியபடி, கொள்வனவு செய்யப்பட்ட சாதனம் சாதனக் கடனுக்கான பிணையாக வைக்கப்படும். சாதனக் கடன் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை கடன் வாங்குபவர் கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தை விற்கவோ அல்லது மாற்றவோ கூடாது.

4.3. கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தில் சாதனத்தைத் தடுக்கும் அம்சம் ஒன்று ('சாதனத்தைத் தடுக்கும் அம்சம்') உள்ளதென்பதை கடன் வாங்குபவர் ஒப்புக்கொள்கிறார், ஏற்றுக்கொள்கிறார் மற்றும் அங்கீகரிக்கிறார். இது சாதனக் கடனுக்காக நிறுவனத்தால் செயல்படுத்தப்படலாம்/பயன்படுத்தப்படலாம். சாதனத்தைத் தடுக்கும் அம்சத்தின் செயல்பாடுகள் பின்வருமாறு.
  • 4.3.1. பதிவு அறிவிப்புகள்:
    ஆரம்பப் பதிவு மற்றும் சிம் அட்டை மாற்ற நிகழ்வுகளைத் தெரிவிக்க இறுதிப் பயனாளி சாதனத்தில்/கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தில் ஒரு செய்தி காண்பிக்கப்படும். இந்தச் செய்தி ஒவ்வொரு சாதனம் மறுதொடக்கம் செய்யப்படும்போதும் சிம் அட்டை மாற்றங்களின்போதும் காண்பிக்கப்படும்.
  • 4.3.2. நிலுவை அறிவிப்புகள்:
    கடன் கட்டணங்கள் நிலுவையாகியிருந்தால், செலுத்துகை நினைவூட்டல்களாக அறிவிப்புகள் கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்திற்கு அனுப்பப்படும்
  • 4.3.3. இடையிட்ட நினைவூட்டல்கள்:
    நிலுவை கட்டண அறிவிப்புக்கு முறையாக செலுத்துதல் செய்யத் தவறினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முடுக்கிய நினைவூட்டலாக இடையிட்ட நினைவூட்டல் கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்திற்கு அனுப்பப்படும்.
  • 4.3.4. சாதனங்களை தடை செய்தல்:
    கடன் செலுத்துகைகள் நிலுவையாகியிருந்தால், கம்பெனி கடன் வாங்குபவரிடமிருந்து பணம் பெறும் வரை கொள்வனவு செய்யப்பட்ட சாதனம் தடை செய்யப்படலாம்.
  • 4.3.5. புற நிகல் நிலை சாதன தடைகள்:
    சாதனமொன்று குறிப்பிடத்தக்க காலத்துக்கு புற நிகல் நிலையில் இருந்தால், அதனை சுயமாக தடை செய்யும் சாதனமொன்று இருக்கும். செலுத்துவதைத் தவிர்க்கும் உத்தியாக கடனாளி வலையமைப்பில் தொடர்பு கொள்ளவில்லையானால், இச்செயற்பாடு நடைபெறலாம். அது சேவையகத்திலிருந்து தரவேற்றம் பெற்றுக் கொள்வதில்லையாதலால், சாதனத்தை கண்டுபிடிக்க இயலாது.
  • 4.3.6. சிம் அட்டை கட்டுப்பாடு:
    அவசியமாயின் சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அல்லது சாதனத்தைப் பூட்டவும் சிம் அட்டைகளை உள்ளமைக்க முடியும். இந்த வசதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட சாதனங்களுக்கு சிம் தாங்கி 1 அல்லது சிம் தாங்கி 2 இல் 'செயற்பாடான டயலொக் சிம்' (Active Dialog SIM) இருப்பது அவசியமாகும்.
  • 4.3.7.கட்டுப்படுத்தப்பட்ட அம்சங்கள்:
4.4. கடன் வசதியின் நிலுவைத் தொகையை அறவிட்டுக் கொள்வதற்காக சேமிப்புக் கணக்கில் உள்ள நிதிகளைத் தடை செய்யும் உரிமையையும் நிறுவனம் கொண்டிருக்கும்.
நியதிகளும் நிபந்தனைகளும்
5.1. மாதாந்த தவணைக் கட்டணங்கள், கடனாளியின் DF இல் பேணப்படும் சேமிப்புக் கணக்கிற்கு எனவும், DF ஆனது கடனாளிக்கு மேலும் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி உரிய திகதியில் சம்பந்தப்பட்ட மாதாந்த தவணைக் கட்டணத்தை கழித்துக் கொள்ளும் எஎனவும் கடனாளி ஒப்புக்கொள்கிறார்.

5.2. DF இல் கடனாளி பெற்றுக் கொண்டுள்ள பிற ஒப்பந்தங்களின் கீழ் உள்ள நிலுவைகளை, இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடனாளிளிடமிருந்து பெறப்பட்ட ஏதேனும் அறவீடுகளைக் கொண்டு தனது தற்றுவின்படி DF ஈடு செய்ய இயலும் என்று கடனாளி ஒப்புக்கொள்கிறார்.

5.3. இங்குள்ள உட்பிரிவுகள் 5.2 மற்றும் 5.3 இன் கீழ் உள்ள விதிகளுக்கு மாறாக, அனைத்து நோக்கங்களுக்கும் மற்றும் பயன்பாடுகளுக்கும் கடன் வசதியை செலுத்தித் தீர்ப்பதற்கான பொறுப்பை எல்லா நேரங்களிலும் கடனாளியே கொண்டிருப்பார் என்பதை கடனாளி குறிப்பாக ஒப்புக்கொள்கிறார் மற்றும் புரிந்துகொள்கிறார்.

5.4. கடனாளி அல்லது கடனாளியின் முகவர்கள், ஊழியர்கள் அல்லது பணியாளர்களால் DF க்கு எழுத்து மூலமாகவோ அல்லது வேறுவிதமாகவோ செய்யப்பட்ட அனைத்து பிரதிநிதித்துவங்களும் அறிக்கைகளும் உண்மையானவை மற்றும் சரியானவை எனக் கொள்ளப்படுவதோடு, அவற்றின் மீது DF ஆல் செயல்பட முடியும் எனவும் மேலும் கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் செய்யப்பட்ட முன்பணத்திற்கான கோரிக்கை இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாக அமையும்.

5.5.வாடிக்கையாளரது நிதி நிலைமையில் ஏற்பட எதிர்பார்க்கும் அல்லது ஏற்பட்ட ஏதும் முக்கிய மாற்றம் பற்றி கடனாளி உடனடியாக DF க்கு அறிவிக்க வேண்டும்.

5.6.வாடிக்கையாளரின் நிதி நிலைமையில் தாக்கம் செலுத்தத் தக்க மற்றும் அவர் சம்பந்தப்பட்டுள்ள ஏதும் வழக்கின் விபரங்களை, அது இடம்பெற்றவுடனேயே வழக்காளி DF க்கு அறிவிக்க வேண்டும்.

5.7.கடனாளியின் வரவிலிருக்கும் எல்லா பணத்தையும், மட்டுப்படுத்தப்படாத அத்தகைய உரிமையையும், செலுத்துகைகள், கோரிக்கைகள் அல்லது மீளெடுத்தல் அல்லது எந்தவொரு அலுவலர் தொடர்பாகவும் அத்தகைய உரிமையை செயல்படுத்தவும், அவ்வாறு செயல்படுத்திய திகதியன்றோ அல்லது அதற்கு முன்னராக கடனாளியினால் செய்யப்பட்ட மற்றைய ஆவணங்கள் என்பனவற்றை செலுத்தாதிருப்பதன் மூலமும், செலுத்த மறுப்பதன் மூலமும் அந்த உரிமையை செயற்படுத்தவும் மற்றும் கடனாளியின் பெயரிலுள்ள ஏதும் கணக்கை முடிவுறுத்தலுமாகும். கடனாளியின் அத்தகைய செயலினால் கம்பெனி மீது ஏற்படும் எல்லா உரிமை பாராட்டுதல்களுக்கும், கோரிக்கைகளுக்கும் எதிராக கம்பெனியை இழப்பீடு செய்ய கடனாளி இத்தால் ஒப்புக் கொள்கின்றார்.

5.8.ஏதும் நீதிமன்றத்தில் அல்லது நியாய சபை மற்றும் அமைப்பு அல்லது நியதிச் சட்ட உத்தயோகத்தர் முன் கம்பெனியினால் வேறேதும் ஆவணங்கள் அல்லது பற்றுச் சீட்டுக்கள் முன் வைக்கப்படாது, கம்பெனியினால் சமர்ப்பிக்கப்படும் கம்பெனியின் முறைமைகள், புத்தகங்கள் அல்லது முகமையாளரினால் அல்லது கணக்காளரினால் கையொப்பமிட்ட மற்றும்/அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவற்றில் இருந்து பெறப்பட்ட கூற்றுக்கள் மற்றும் சாராம்சங்கள், ​ கடனாளி கம்பெனிக்கு பொறுப்புடையவர் என்பதற்கான முடிவான அத்தாட்சியாகும்.

5.9.இந்த ஆவணமானது, ஒரு நிறுவனத்தின் பங்காளிகள் என்ற முறையில் அல்லது வேறுவிதமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் கையொப்பமிடப்பட்டால் அல்லது அவர்கள் சார்பாக கையொப்பமிடப்பட்டால், அத்தகைய நபர் இந்தக் கடன் வசதியின் முழுத் தொகைக்கும் அதன் மீதான வட்டிக்கும் கூட்டாகவும் தனித்தனியாகவும் DF க்கு பொறுப்பாவார்கள். மேலும் இந்தக் கடன் வசதி மற்றும் அதன் மீதான வட்டியும் நிலுவையாக இருக்கும் வரை, அத்தகைய ஒவ்வொரு நபரும் முதன்மை கடனாளியாகப் பொறுப்பாவார்கள்.

5.10.இந்தக் கடன் தொடர்பில் கடனாளியினால் கம்பெனிக்குச் செலுத்தப்பட வேண்டிய பணங்களும் அதன் மீதான வட்டியும், காலவிதிப்பு கட்டளைச் சட்டத்தைப் (பத்தி 68) பொருட்படுத்தாது, கடனாளியிடமிருந்து அறவிடப்பட வேண்டியதோடு, குறித்த பணங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக கடனாளிக்கு எதிராக கம்பெனி வழக்கு தொடர்வதற்கு தடையாக காலவிதிப்பு கட்டளைச் சட்டத்தை (பத்தி 68) முன்வைக்க முடியாது.

5.11.DF மற்றும் அதன் உத்தயோகத்தர்கள் அல்லது அதன் முகவர்களுக்கு மேற்கண்டவாறும் வேறெங்கும் வேறு விதமாகவும் கடனாளியினாலோ அல்லது அவரது சார்பாகவோ அவரின் முகவர்கள், பணியாளர்கள் அல்லது உத்தியோகத்தர்களினாலோ எழுத்து மூலமாவோ அல்லது வேறு விதமாகவோ செய்யப்பட்டுள்ள சகல பிரதிநிதித்துவங்களும் கூற்றுக்களும் இத்தால் உண்மையானவையெனவும், சரியானவை எனவும் கொள்ளப்படுவதோடு, அவற்றின்பால் கம்பெனி செயற்படத் தக்கவையும், குறித்த பணங்களை அறவிட்டுக் கொள்வதனால் விளையும் ஒப்பந்தத்துக்கு அடிப்படையானவையுமாகும்.

5.12.கடனாளியினால் தவறும் பட்சத்தில், நிலுவையாகவுள்ள பணத்தை அறவிடுவதற்காக மூன்றாம் தரப்பு கடன் அறவீட்டாளர் ஒருவரை நியமிப்பதற்கும், அதன் போது ஏற்படும் எல்லா செலவினங்களையும் செலுத்துவதற்கும் கடனாளி உடன்படுகின்றார்.

5.13.அவ்வக்காலத்துக்கு DF க்குச் செலுத்தப்பட வேண்டிய அல்லது அதற்கு விளைந்த பணங்கள் மற்றும் நிலுவைகள் பற்றி அதன் அதிகாரி ஒருவரின் எழுத்து மூலமான சான்றுப் பத்திரமானது,, அப்பணங்கள் மற்றும் நிலுவைகளும் DF க்குச் செலுத்தப்பட வேண்டியன என்பதற்கு முதல் தோற்றச் சான்றாகும்.

5.14.கடனை முழுமையாகச் செலுத்தித் தீர்ப்பதற்கு முன்னதாக, கடனாளி அதன் செல்லிடத் தொலைபேசியின் உரிமையையும் மற்றும்/அல்லது அதன் சுயவிபரங்ளையும் கைமாற்றக் கூடாது.

5.15.கடனாளியானவர், இலக்க நுழைவு அம்சத்தை பயன்படுத்த நாடுவாராயின், அவர் டயலொக் வலையமைப்பிலிருந்து வெளிச்செல்வதற்கு முன் சாதனக் கடனை முழுமையாகச் செலுத்தித் தீர்க்க வேண்டும்.

5.16.சாதனக் கடன் வசதி முழுமையாகச் செலுத்தித் தீர்க்கப்படும் வரை, கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தின் உரித்துரிமை கம்பெனிக்கு இருக்கும் என்பதனைக் கருத்திற் கொள்ளாது, கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தின் வர்த்தகத் தரத்துக்கும் மற்றும்/அல்லது அதன் உபயோகத்துக்கும் கம்பெனி உத்தரவாதமளிக்காது.

5.17.சாதனம் TRCSL இனால் அங்கீகரிக்கப்பட்டதெனவும், பதிவு செய்யப்பட்டதெனவும் சில்லறை வர்த்தகரிடம் சரி பார்த்த பின்னரே அதனை கொள்வனவு செய்ய கடனாளி உடன்படுகின்றார்.

5.18.இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்திற்காக (கடன் சரிபார்ப்பு மற்றும் செயலாக்க நோக்கங்கள் உட்பட) தேவைப்படும் இடங்களில், முழு பெயர், NIC எண், முகவரி மற்றும் மொபைல் எண் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்லாமல், தனது விவரங்களை சில்லறை விற்பனையாளருடன் பகிர்ந்து கொள்ள கடனாளி வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்.

5.19.புதிதாக முத்திரையிடப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனத்தை கையில் வைத்துக்கொண்டு கடனாளி தனது மொபைல் சாதனத்திலிருந்து ஒரு செல்ஃபி புகைப்படம் எடுத்து, கடன் சரிபார்ப்பு நோக்கங்களுக்காக காணொளியில் வழங்க வேண்டும்.

5.20.சம்பந்தப்பட்ட முன்பணம் மற்றும் வசதிக் கட்டணம் சில்லறை விற்பனையாளரால் நேரடியாக வசூலிக்கப்படும் என்று கடனாளி ஒப்புக்கொள்கிறார்.

5.21.சாதனப் பொதி அவிழ்க்கப்பட்ட பிறகு, அதை சில்லறை விற்பனையாளரிடம் திருப்பித் தர முடியாது (பணத்தைத் திருப்பிச் செலுத்தும் கொள்கை இல்லை) என்று கடனாளி ஒப்புக்கொள்கிறார்.

5.22.சாதனத் தடை அம்சத்தை (device-locking feature) செயல்படுத்துவதற்காக அதனை கடனாளி முன்னிலையிலேயே சில்லறை விற்பனையாளர் சாதனத்தை அவிழ்ப்பார் என்பதை கடனாளி உறுதிசெய்து ஒப்புக்கொள்ள வேண்டும்.

5.23.சாதனத்தின் பழுதுபார்ப்பு அல்லது மாற்றியமைத்தல், சம்பந்தப்பட்ட உத்தரவாத விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட சேவை பங்காளியினால் மட்டுமே கையாளப்படும் என்று கடனாளி ஒப்புக்கொள்கிறார்.

5.24.அனைத்து திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் தொடர்புடைய பரிமாற்றங்கள் Genie App இல் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பிச் செலுத்தும் முறை மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடனாளி ஒப்புக்கொள்கிறார்.

5.25எந்தச் சூழ்நிலையிலும் Genie App நற்சான்றுகளை (உள்நுழைவு கடவுச்சொல் மற்றும் OTPகள்) சில்லறை விற்பனையாளருடன் பகிர்வதைத் தவிர்க்க கடனாளி ஒப்புக்கொள்கிறார்.
தரவுப் பகிர்வு
6.1. கம்பெனியானது, 2016, 8 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1968, 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் 39பீ (சி) இன் கீழ் இலங்கையின் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட அதிகார நிறுவனமொன்றென கடனாளி விளங்கியுள்ளார். அதற்கிணங்க, கடனாளியின் தேசிய அடையாள அட்டையின் விபரங்களையும், ஆ.தி. இல் பேணப்படும் விபரங்களையும் பெற்றுக் கொள்வதற்கும், கடனாளியின் கீழ்வரும் தகவல்கள் உட்பட அவரினால் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அதிகாரபூர்வ தன்மையை பரீட்சிப்பதற்கும் கடனாளி இத்தால் விருப்பம் தெரிவிக்கின்றார்.

6.2. www.dialogfinance.lk இல் அமைந்துள்ள மற்றும் அவ்வப்போது திருத்தப்படும் நிறுவனத்தின் இரகசியத் தன்மை அறிவித்தலுக்க கடனாளி சம்மதிக்கிறார், குறிப்பாக;
  • 6.2.1. கடனாளிக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குவதற்காக மற்றும்/அல்லது அவ்வப்போது வெளியிடப்பட்ட ஏதேனும் சட்டம்/விதி/அறிவுறுத்தல்/ஒழுங்குமுறை தேவைக்கேற்ப ஏதேனும் அரசாங்க அதிகாரம்/சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை அமைப்புடன் மற்றும்/அல்லது அத்தகைய அதிகாரம் அல்லது DF ஆல் நடத்தப்படும் ஏதேனும் விசாரணை, ஆய்வு அல்லது சட்ட நடவடிக்கைகளின் நோக்கத்திற்காக கடன் வாங்குபவரின் தகவல்களை அதன் துணை நிறுவனங்கள் மற்றும்/அல்லது ஹோல்டிங் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றுடன் பகிர்ந்து கொள்ள DF க்கு கடனாளி சம்மதிக்கிறார்,
  • 6.2.2. கடனாளியின் வசதிகள்/பரிவர்த்தனைகள் மற்றும்/அல்லது நிறுவனம் உடனான வணிகம் தொடர்பான ஏதேனும் தகவல்களை அவ்வப்போது வெளியிடப்பட்ட ஏதேனும் சட்டம்/விதி/அறிவுறுத்தல்/ஒழுங்குமுறை தேவைக்கேற்ப ஏதேனும் அரசாங்க அதிகார சபை/சட்டரீதியான அல்லது ஒழுங்குமுறை அமைப்புடன் மற்றும்/அல்லது அத்தகைய அதிகாரம் அல்லது DF ஆல் நடத்தப்படும் ஏதேனும் விசாரணை, ஆய்வு அல்லது சட்ட நடவடிக்கைகளின் நோக்கத்திற்காக மற்றும்/அல்லது DF இன் மேலே குறிப்பிட்ட தனியுரிமை அறிவிப்பில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக அத்தகைய பிற நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள கடனாளி சம்மதிக்கின்றார்.
6.3. கடனாளியின் கடன் நிர்வாகத்தை மதிப்பிடுவதற்காகக் கடன் தகவல் பணியகத்தில் (CRIB) உள்ள கடனாளியின் தகவல்களை அணுகுவதற்கும், DF ஆல் அவ்வப்போது வழங்கப்பட்ட சாதனக் கடன் வசதியின் விவரங்களை CRIB க்கு புகாரளிப்பதற்கும் DF க்கு கடனாளி சம்மதிக்கிறார்.
முக்கிய மீறல்
7.1.பின்வரும் நிலைமைகளில் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கொள்ளப்படும்.
  • 7.1.1. உரிய தினத்தில் கடனாளி பணத்தைச் செலுத்தத் தவறுதலும் கோரப்படும் போது (சகல அறவீடுகள், தண்டப் பணங்கள், கட்டணங்கள், வட்டி, மற்றும் நிலுவையிலுள்ள வேறு தொகைகள் என்பவற்றுடன முழுத் தொகையையும் வட்டியுடன் செலுத்தத் தவறுதல்,
  • 7.1.2. இந்த ஒப்பந்தத்தின் ஏதும் நியதிகளையும் நிபந்தனைகளையும் ஒழுகி நடப்பதற்கு கடனாளி தவறுதல் மற்றும்/ அல்லது உதாசீனம் செய்தல்,
மீறுகையினதும் தவறுகையினதும் விளைவுகள்
7.1.ஏதேனும் முக்கியமானதொரு மீறல் இடம் பெற்றால், அத்தகைய தவறு நிறுவனத்தால் கடன் வாங்குபவருக்கு அறிவிக்கப்பட்ட 07 நாட்களுக்குப் பிறகும் சரிசெய்யப்படாமல் இருந்தால், DF தனது தற்றுணிவின்படி இந்த ஒப்பந்தத்தை முடிவுறுத்தலாம். அத்தகைய முடிவுறுத்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தின் கீழ் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த அந்தந்த உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இந்த முடிவுறுத்தல் பராதீனமாக அமையாது.

7.2.கடனாளி செலுத்த வேண்டிய பணத்தை மீட்டெடுப்பது தொடர்பாக சட்டத்தின் கீழ் கிடைக்கும் எந்தவொரு தீர்வுகளையும் பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் உரிமைக்குப் பராதீனமின்றி, முடிவுறுத்தலுக்குப் பின்னரும் நிறுவனம் பின்வரும் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்கிறது.
  • 7.2.1.வாங்கப்பட்ட சாதனத்தில் உள்ள சாதனத் தடை அம்சத்தை (Device Blocking Feature) செயல்படுத்துதல்.
  • 7.2.2.சாதனக் கடன் முழுமையாகத் செலுத்ததீர்க்கப்படும் வரை பதிவுசெய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்தின் உரிமையை மாற்றுவதைத் தடுக்க டயலொக் குழுமத்திற்கு அறிவுறுத்துதல்.
  • 7.2.3.கடனாளியின் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கடனாளியின் வலையமைப்பு இணைப்பைத் தடுக்க மற்றும்/அல்லது துண்டிக்க டயலொக் குழுமத்திற்கு அறிவுறுத்துதல்.
  • 7.2.4.தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வேறு ஏதேனும் இணைப்பை (தொலைக்காட்சி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் போன்றவை) துண்டிக்க டயலொக் குழுமத்திற்கு அறிவுறுத்துதல்.
  • 7.2.5.ஏதேனும் புதிய உற்பத்திகள் அல்லது சேவைகளைப் பெறுவதிலிருந்து கடன் வாங்குபவரைத் தடுக்க டயலொக் குழுமத்திற்கு அறிவுறுத்துதல்.
  • 7.2.6.கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தை நிறுவனத்திடம் திருப்பித் தருமாறு கடன் வாங்குபவரைக் கோருதல், மேலும் அத்தகைய அறிவிப்புக்குப் பிறகு கடனாளி சாதனத்தைத் திருப்பித் தரத் தவறினால், கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தின் உடைமையை மீட்டெடுக்கத் தானாகவோ அல்லது ஏதேனும் மூன்றாம் தரப்பு அறவீட்டு முகவர் மூலமாகவோ தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கான உரிமையை நிறுவனம் கொண்டுள்ளது. இந்தக் உட்பிரிவின் நோக்கத்திற்காக, கடன் வாங்கியவரின் அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் உள்ளடக்கத்தையும் சாதனத்திலிருந்து நீக்குதல், கடனாளியுடன் கொண்டுள்ள, மேலும் கடனாளி தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதால் அத்தகைய தனிப்பட்ட தரவு மற்றும் உள்ளடக்கம் ஏதேனும் மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்பட்டால், அத்தகைய தனிப்பட்ட தரவு மற்றும் உள்ளடக்கம் வெளிப்பட்டதற்கு நிறுவனம் பொறுப்பாகாது.
7.3.இங்குள்ள உட்பிரிவுகள் 8.1 மற்றும் 8.2 இன் கீழ் அத்தகைய முடிவுறுத்தலின் விளைவாக, சாதனக் கடன் வசதியை அறவிட்டுக் கொள்ளும் செலவு உட்பட, இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடனாளி செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகை, பிற கட்டணங்கள், கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகைகளுடன், கோரிக்கையின் பேரில் உடனடியாக நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் என்று கடனாளி ஒப்புக்கொள்கிறார்.

7.4.கொள்வனவு செய்யப்பட்ட சாதனத்தின் உடைமையை நிறுவனம் மீட்டெடுக்கும் பட்சத்தில், கடனாளிக்கு மேலும் எந்தவிதமான கோரிக்கையும் அல்லது அறிவிப்பும் இல்லாமல், சாதனத்தை விற்கவும், சாதனக் கடன் வசதியின் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை அறவிடுவதற்காக அந்த விற்பனையின் வறுமானத்தைப் பயன்படுத்தவும் நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
உரிமை விட்டுக் கொடுப்பும் மாறுகையும்
9.1.இதன் கீழ் விபரிக்கப்பட்டுள்ள ஏதும் உரிமை, அதிகாரம், சிறப்புரிமை, கோரிக்கை அல்லது பரிகாரம் என்பவற்றை நடைமுறைப்படுத்தல், செயற்படுத்தல் அல்லது தொடர்தல் போன்றனவற்றின் போது ஏதும் தரப்பினரால் ஏற்படும் தாமதம், தவறு அல்லது கைவிடுதல் அல்லது இதன் கீழான பொறுப்புடைமைகள் ஏதும் தரப்பினரால் மீறப்படுதல் என்பன, அவற்றை விட்டுக் கொடுத்ததாக அர்த்தம் கொள்ளவோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும், செயற்படுத்துவதற்கும் இதன் பிறகு எவ்வேளையிலும் தடையாக செயற்படவோ கூடாது.
பிரிக்கக் கூடிய தன்மை / சட்ட விரோதம்
10.1.இந்த ஒப்பந்தத்தில் ஏதும் நியதி அல்லது ஏற்பாடு, ஏதும் சட்டவாக்கம் அல்லது சட்டவாட்சியின் கீழ் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சட்ட விரோதமானது அல்லது நடைமுறைப்படுத்தப்பட முடியாதது எனக் கொள்ளப்பட்டால், அத்தகைய நியதி அல்லது ஏற்பாடு அந்தளவில் இந்த ஒப்பந்தத்தின் பகுதியாக கொள்ளப்படல் ஆகாது. எனினும், இந்த ஒப்பந்தத்தின் எஞ்சியவையின் நடைமுறைப்படுத்தல் தன்மை பாதிக்கப்படலாகாது.
பிரத்தியேக சட்டவாதிக்கம்
11.1.இந்த ஒப்பந்தம் மற்றும் இதன் கீழ் சமர்ப்பிக்கப்படும் பிணைப் பொறுப்பு, அனைத்து விஷயங்களிலும் இலங்கைச் சட்டங்களின்படி நிர்வகிக்கப்படும் மற்றும் அர்த்தம் கொள்ளப்படும், மேலும் நிறுவனமும் கடனாளியும் இலங்கையின் கொழும்பு நீதிமன்றங்களின் சட்டவாதிக்கத்துக்கு இதன்மூலம் மாற்ற முடியாத வகையில் உட்படுகின்றனர், மேலும் அத்தகைய நடவடிக்கை அல்லது வழக்குகள் தொடர்பான ஏதேனும் பேராணை அல்லது அழைப்பாணை அல்லது ஏதேனும் சட்டப்பூர்வ செயல்முறையை, அத்தகைய பேராணை அல்லது அழைப்பாணை அல்லது உரிமைக் கோரிக்கை அறிக்கை அல்லது பிற சட்டப்பூர்வ செயல்முறையின் நகலை முன்பணம் செலுத்திய பதிவுத் தபால் மூலம் இதன் தரப்பினருக்கு முன்னர் குறிப்பிட்ட முகவரிகளுக்கு அனுப்புவதன் மூலம் ஒப்படைக்கலாம்.

11.2.இந்த ஒப்பந்தம் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இடத்தில் மற்றும்/அல்லது கடன் தவணைகள் செலுத்தப்படும் நிறுவனத்தின் பிரதான வணிக இடம்/பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் செய்யப்பட்டதாகக் கருதப்படும்.
அறிவித்தல்கள்
12.1.இந்தக் ஒப்பந்தத்தின் கீழான அனைத்து கோரிக்கைகளும், நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் கையொப்பத்துடன், கடனாளிக்கு முகவரியிடப்பட்ட கடிதம் மூலம் தபாலில் அனுப்புவதன் மூலம் அல்லது கடன் விண்ணப்பத்தில் கடனாளி வழங்கிய முகவரிக்கு, கடனாளியின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அல்லது கடனாளி அவ்வப்போது எழுத்து மூலமாகத் தொடர்பு கொண்ட முகவரிக்கு வழங்குவதன் மூலம் நிறுவனத்தால் செய்யப்படலாம். மேலும் அவ்வாறு வழங்கப்பட்ட அல்லது செய்யப்பட்ட கோரிக்கை அறிவிப்பு, அது வழங்கப்பட்ட நாளிலோ அல்லது தபாலில் அனுப்பப்பட்டதற்கு அடுத்த நாளிலோ வழங்கப்பட்டதாகவோ அல்லது ஒப்படைக்கப்பட்டதாகவோ அல்லது பெற்றுக் கொள்ளப்பட்டதாகவோ கருதப்படும்.

12.2.பொருந்தமான சந்தர்ப்பங்களில், குறுஞ்செய்தி சேவைகள் (SMS) வழியாக கைத்தொலைபேசி இலக்கத்துக்கு, வசதியை அணுகுவதற்காக கடனாளிக்குக் கிடைக்கும் எந்தவொரு நிரல் நிலைத்த தளத்திற்கும், சாதனத்தில் கிடைக்கும் சாதனத்தைத் தடுக்கும் அம்சம் வழியாக அல்லது கடன் விண்ணப்பத்தில் கடனாளி வழங்கிய அல்லது அவ்வப்போது எழுத்து மூலமாமாகத் தொடர்புகொண்ட மின்னஞ்சல் முகவரிக்கு நிறுவனத்தால் அனுப்பப்படும் ஏதேனும் அறிவிப்புகள், கோரிக்கைகள் மற்றும்/அல்லது நினைவூட்டல்கள், மின்னணு செய்திகளாக இருப்பதால், அதன் மூலம் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட அறிவிப்புகள், கோரிக்கைகள் மற்றும்/அல்லது நினைவூட்டல்களாகக் கருதப்படும் என்று கடனாளி ஒப்புக்கொள்கின்றார்.

12.3 அனைத்து செலுத்துகைகளும், அவை செலுத்துகைகள்/சேதங்கள்/சட்டரீதியான செலுத்துகைகள்/சேவைக் கட்டணங்கள் எனக் கருதப்பட்டாலும், பற்றுச்சீட்டு/ ஒப்புதல் அளிக்கப்படும் என்று மேலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது.
வரைவிலக்கணங்கள்
13.1.“கடன் வசதி/LESI PAY வசதி/LESI PAY கடன் வசதி/சாதனக் கடன்'
இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், நிறுவனத்தின் ஏகத் தற்றுணிவின்படி ஒரு சாதனத்திற்கு நிதியளிக்கும் நோக்கத்திற்காக DF ஆல் கடனாளிக்கு வழங்கப்படும் கடன் வசதியைக் குறிக்கும்.

13.2.‘வழங்கள் கடிதம் /உற்பத்திக் கூற்று’
அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதம், கடன் வசதித் தொகை, தண்ட வட்டி, அறவீடுகள் மற்றும் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்), திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் கடன் வசதிக்குப் பொருந்தக்கூடிய அறவீட்டு நடைமுறைகள் உட்பட (ஆனால் அவற்றிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல்) கடனாளிக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான அடிப்படைத் தகவல்களைக் கொண்ட ஆவணம், எழுத்து மூல அறிக்கை மூலமாகவோ அல்லது கடனாளிக்குக் கிடைக்கும் எந்தவொரு நிகல் நிலை தளத்திலும் அத்தகைய டிஜிட்டல் திரை மூலமாகவோ (ஏதேனும் குறிப்பிட்ட தலைப்புடன் அல்லது இல்லாமல்) குறிக்கும்.

13.3.'சேமிப்புக் கணக்கு'
DF உடன் கடனாளி திறந்த சேமிப்புக் கணக்கைக் குறிக்கும்

13.4.வட்டி
கடன் வசதிக்கு விதிக்கப்படும் வட்டியைக் குறிக்கும், மேலும் நிலவும் சந்தை நிலவரங்களைப் பொறுத்து கடன் வாங்குபவருக்கு முன்னறிவிப்புடன் வட்டி விகிதத்தை மாற்றுவதற்கான உரிமையை DF கொண்டுள்ளது.

13.5.'நிலுவையில் உள்ள கடன்/நிலுவைகள்'
கடன் வசதிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளைக் குறிக்கும்.

13.6.'மாதாந்த/வாராந்த தவணைக் கட்டணம்'
கடனாளிக்கு வழங்கப்பட்ட வழங்கள் கடிதம் /உற்பத்திக் கூற்றில் வரையறுக்கப்படக்கூடிய கடன் வசதியின் கீழ் செலுத்த வேண்டிய மாதாந்த/வாராந்த தவணை செலுத்துதலைக் குறிக்கும்.

13.7.'ஒப்பந்தம்'
இந்த நியம விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், கடன் விண்ணப்பம் மற்றும் கடனாளிக்கு வழங்கப்பட்ட வழங்கள் கடிதம் /உற்பத்திக் கூற்றைக் குறிக்கும்