Dialog Finance வழங்கும் Flexipay

உங்கள் கட்டண முறைக்கான சிறந்த வழி!

இந்த சேவையின் மூலம், உங்கள் Dialog Finance Debit கார்ட் பரிவர்த்தனைகளை 3 அல்லது 6 மாதங்கள் வரை வசதியான தவணை திட்டங்களாக மாற்றி, மாதாந்தம் செலுத்தலாம். அதற்காக, நீங்கள் genie App மூலம் எளிதான மற்றும் வசதியான தவணை திட்டத்தைப் பெறலாம், மேலும் எவ்வகையான ஆவணங்களும் தேவையில்லை. இது முன் அங்கீகரிக்கப்பட்ட தவணைத் திட்டம் என்பதால், நீங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் இந்த சேவையை அனுபவிக்க முடியும். Dialog Finance அறிமுகப்படுத்திய Flexipay, உங்கள் நிதிகளை திறமையாக நிர்வகிப்பதற்கான சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான வழியாகும்..

தனித்துவமான நன்மைகள்:
நெகிழ்வான கட்டணத் திட்டங்கள் - 3 அல்லது 6 மாதங்களுக்கு உங்களுக்குப் பொருத்தமான தவணை திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு.
எவ்வகையான ஆவணங்களும் தேவையில்லை - உங்களிடம் முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு இருப்பதால், கூடுதல் ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
மொத்த பரிவர்த்தனை பெறுமதி - உங்கள் பரிவர்த்தனையின் முழுத் தொகையையும் உடனடியாக மாதாந்த தவணைத் திட்டமாக மாற்றலாம்.
பெரும்பாலான கடைகளில் செல்லுபடியாகும் -Utility மற்றும் தொலைபேசி (Telco) பில் கொடுப்பனவுகளை தவிரஇ, நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய அனைத்து கடைகளிலும் இந்த வசதி கிடைக்கிறது.
பல தவணைத் திட்டங்கள் - உங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடன் வரம்பிற்குள், ஒரே நேரத்தில் பல தவணைத் திட்டங்களைப் பெறும் வசதி.
நீங்கள் Flexipay க்கு தகுதியுடையவரா என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம்:
படிமுறை 01: genie app இல் Log ஆகி Flexipay icon ஐ க்ளிக் செய்யுங்கள்.

படிமுறை 02: நீங்கள் தகுதி பெற்றிருந்தால், "Get Started" button ஐ க்ளிக் செய்யும்போது, உங்கள் Dialog Finance Debit கார்ட் உடன் உங்கள் சமீபத்திய பரிவர்த்தனைகள் திரையில் தோன்றும்.

நீங்கள் தகுதியற்றவராக இருந்தால், பின்வரும் காரணங்களுக்காக உங்கள் பரிவர்த்தனைகள் காண்பிக்கப்படாமல் போகலாம்:
  • Active SMART சேமிப்புக் கணக்கு இல்லாதது அல்லது போதுமானளவு பணம் வைப்பு செய்யப்படாமை .
  • Dialog Finance Debit அட்டை இல்லாத போது.
தகுதி பெறுவது எப்படி என்பதை அறிய, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) பகுதியைப் பார்வையிடவும்.
எப்படி விண்ணப்பிப்பது:
படிமுறை 01: genie app இல் உள்நுழைந்து Flexipay Icon ஐ க்ளிக் செய்யவும்.

படிமுறை 02: "Get Started" button ஐ க்ளிக் செய்யவும்.

படிமுறை 03: உங்கள்Dialog Finance Debit கார்ட் மூலம் சமீபத்தில் செய்யப்பட்ட பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுத்து அதை ஒரு தவணைத் திட்டமாக மாற்றவும்.

படிமுறை 04: 3 அல்லது 6 மாதங்களுக்கு நீங்கள் விரும்பும் காலத்தை தேர்ந்தெடுக்கவும்.

படிமுறை 06: செயல்முறையை நிறைவு செய்யவும், கடன் தொகை உங்கள் genie SMART கணக்கில் வரவு வைக்கப்படும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
Flexipay என்றால் என்ன?
Dialog Finance வழங்கும் Flexipay என்பது ஒரு வசதியான கட்டண சேவையாகும், இது உங்கள் விருப்பப்படி நீங்கள் விரும்பும் பொருட்களை வாங்குவதை எளிதாக்குகிறது. உங்கள் Dialog Finance Debit கார்ட் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை இப்போது உடனடியாக 3 அல்லது 6 மாதங்களுக்கான வசதியான தவணை திட்டங்களாக மாற்றலாம், மேலும் மொத்த கட்டணத்தையும் genie App மூலம் தவணைகளாக பிரிக்கலாம். இந்தச் சலுகை Dialog Finance Debit கார்ட் வைத்திருக்கும் SMART சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
Flexipay ஐ பயன்படுத்த யார் தகுதியுடையவர்கள்?
வழக்கமான வைப்புகளை மேற்கொள்ளும் தங்கள் SMART கணக்கை தீவிரமாகப் பயன்படுத்தும் மற்றும் தங்கள் Dialog Finance debit கார்டுடன் அடிக்கடி பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் Flexipay வசதியை பெறலாம். உங்களிடம் ஏற்கனவே Quick Loan அல்லது LesiPay இருந்தால், Flexipay க்கு தகுதி பெறுவதற்கு முன்பு அந்தக் கடனை செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Flexipay க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
நீங்கள் Flexipay க்கு தகுதியுடையவராக இருந்தால்,
  • Genie app இல் Log ஆகுங்கள்
  • Home screen இல் “Flexipay” icon I தேர்ந்தெடுக்கவும்.
  • தவணைத் திட்டமாக மாற்ற விரும்பும் பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விபரங்களை மதிப்பாய்வு செய்து தவணைத் திட்டத்தை உறுதிப்படுத்தவும்.
எனக்கு SMART கணக்கு இருந்தும், Dialog Finance Debit கார்ட் இல்லாவிட்டால், நான் Flexipay க்கு விண்ணப்பிக்க முடியுமா?
  • படிமுறை 01: உங்கள் Dialog Finance Debit கார்டுக்கு genie app மூலம் விண்ணப்பித்து, அதைப் பெற்றுக்கொண்டவுடன் அதை செயற்படுத்தவும்.
  • படிமுறை 02: உங்கள் Dialog Finance Debit கார்டை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செய்த பின்னர், தவணைத் திட்டமாக மாற்றக்கூடிய பரிவர்த்தனைகள் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
  • படிமுறை 03: நீங்கள் தவணைத் திட்டமாக மாற்ற விரும்பும் Dialog Finance Debit கார்ட் பரிவர்த்தனையை தேர்ந்தெடுக்கவும். தகுதி பெற, உங்கள் சேமிப்புக் கணக்கில் குறிப்பிடத்தக்க தொகையை பராமரிக்க வேண்டும் மற்றும் வழக்கமான வைப்புகளை செய்வதன் மூலம் SMART கணக்கை செயற்படும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.இந்த நோக்கத்திற்காக வாடிக்கையாளராக உங்கள் தகுதியை தீர்மானிக்கும் உரிமையை Dialog Finance கொண்டுள்ளது..
SMART சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவராகவோ அல்லது Dialog Finance Debit கார்ட் வைத்திருக்காமலோ நான் Flexipay க்கு விண்ணப்பிக்க முடியுமா?
  • படிமுறை 01: genie app ஐ டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள். எந்தவொரு ஆவணங்களும் இல்லாமல் நேரடியாக App இன் மூலம் ஆன்லைன் SMART கணக்கைத் திறக்க "Savings" icon ஐ க்ளிக் செய்யுங்கள்.
  • படிமுறை 02: SMART சேமிப்புக் கணக்கிற்கு விண்ணப்பித்த பிறகு, உங்கள் Dialog Finance Debit கார்டுக்கும் விண்ணப்பிக்கவும். கார்டை பெற்றவுடன் அதை செயற்படுத்தவும்..
  • படிமுறை 03: இந்தச் சேவைக்குத் தகுதி பெற, உங்கள் debit கார்டைத் தொடர்ந்து பயன்படுத்தவும், நல்ல சேமிப்பு மிகுதியை பராமரிக்கவும், வழக்கமான வைப்புகளைச் செய்வதன் மூலம் கணக்கைச் செயற்படும் நிலையில் வைத்திருக்கவும். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் வாடிக்கையாளரின் தகுதியைத் தீர்மானிக்கும் உரிமையை Dialog Finance கொண்டுள்ளது..
  • படிமுறை 04: உங்கள் Dialog Finance debit கார்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செய்த பின்னர் தவணைத் திட்டமாக மாற்றக்கூடிய பரிவர்த்தனைகள் உங்களுக்குக் காண்பிக்கப்படும்..
  • படிமுறை 05: நீங்கள் தவணைத் திட்டமாக மாற்ற விரும்பும் Dialog Finance debit கார்ட் பரிவர்த்தனையை தேர்ந்தெடுக்கவும்.
Flexipay க்கு விண்ணப்பிக்க ஆவணங்கள் தேவையா?
SMART கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மேலதிக ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. புதிய வாடிக்கையாளர்கள் SMART கணக்கைத் திறக்க வேண்டும்.
முழு பரிவர்த்தனை பெறுமதியையும் ஒரே தவணைத் திட்டமாகப் பெற முடியுமா?
உங்கள் மீதமுள்ள கடன் வரம்பிற்குள் இருந்தால், முழு பரிவர்த்தனை மதிப்பையும் ஒரு தவணைத் திட்டமாகப் பெறலாம்.
எனது மாதாந்திர தவணை செலுத்தும் தேதியை மாற்ற முடியுமா?
இல்லைஇ உங்கள் Flexipay மாதாந்த தவணை செலுத்தும் திகதியை மாற்றுவது தற்போது சாத்தியமில்லை.
எனது கடன் வரம்பை எவ்வாறு தீர்மானிப்பது?
உங்கள் SMART சேமிப்புக் கணக்கின் செயல்திறனால் உங்கள் கடன் வரம்பு தீர்மானிக்கப்படுகிறது.
எனது Dialog Finance Debit கார்ட் மூலம் செய்யப்படும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் நான் Flexipay ஐ பயன்படுத்தலாமா?
உங்கள் Dialog Finance Debit கார்ட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் தொகை ரூ.5,000 க்கும் அதிகமாக இருந்தால் மற்றும் பரிவர்த்தனை கடந்த 30 நாட்களுக்குள் செய்யப்பட்டிருந்தால், Flexipay ஐ பயன்படுத்தலாம்.இருப்பினும், telco மற்றும் utility கட்டணங்கள் மற்றும் ATM withdrawal சாத்தியமில்லை. "Eligible Transactions" என்பதற்கு சென்று நீங்கள் செய்யக்கூடிய பரிவர்த்தனைகளை சரிபார்க்கலாம்.
Flexipay க்கு பொருந்தக்கூடிய கட்டணங்கள் யாவை?
Flexipay க்கு இரண்டு கட்டணங்கள் உள்ளன:
  • Processing Fee:இது உங்கள் பரிவர்த்தனைகளின் மதிப்பின் அடிப்படையில் (பரிவர்த்தனை மதிப்பில் 5%) ஒரு சிறிய சேவைக் கட்டணமாகும்.தவணைத் திட்டத்திற்கு மாற்றும்போது அது கழிக்கப்படும்,மீதமுள்ள தொகை உங்கள் SMART கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • Interest Fee: genie App இல் உங்கள் வருடாந்த வட்டி விகிதத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.
எனது தவணை திட்ட விபரங்களை நான் எப்படிப் பார்ப்பது?
Genie App இல் Flexipay என்பதன் கீழ் உள்ள "Installments in Progress" section பிரிவில் உங்கள் அனைத்து தவணைத் திட்ட விபரங்களையும் நீங்கள் காணலாம்.
எனது தவணை கொடுப்பனவுகளை எவ்வாறு செலுத்துவது?
தொடர்புடைய தவணை கொடுப்பனவு தொகை உங்கள் SMART கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும் (தானியங்கி மீட்பு செயல்முறை).
Flexipay க்கான கட்டண காலம் எவ்வளவு?
Flexipay 3 அல்லது 6 மாதங்களுக்கு வசதியான கட்டண விதிமுறைகளை வழங்குகிறது.
நான் தவணையை தாமதமாக செலுத்தினால் என்ன நடக்கும்?
தாமதமாக செலுத்தும் தொகைக்கு 3% தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும்.
எனது தவணைத் திட்டத்தை நிலுவைத் திகதிக்கு முன்பே செலுத்த முடியுமா?
ஆம், நீங்கள் தவணைத் திட்டத்தை முன்கூட்டியே செலுத்தலாம். இருப்பினும், மொத்தமாக செலுத்தப்படாத தொகையில் 1.5% முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தவணைத் திட்டங்களுக்கு நான் விண்ணப்பிக்கலாமா?
ஆம், பல பரிவர்த்தனைகளுக்கு பல தவணைத் திட்டங்களைப் பெறலாம். நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஒரு தனி தவணைத் திட்டமாக அமைக்கப்படலாம்.

இங்கே முக்கியமானது என்னவென்றால், நீங்கள் பெற்றுக்கொள்ளும் அனைத்து தவணைத் திட்டங்களின் மொத்தம் உங்கள் தகுதி வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
ஒரே தவணை திகதியில் பல தவணைத் திட்டங்களை செலுத்த வேண்டியிருந்தால், எனது ஸ்மார்ட் சேமிப்புக் கணக்கிலிருந்து மாதாந்த தவணையை எவ்வாறு வசூலிப்பது?
​​நீங்கள் ஒரே நேரத்தில் பல தவணைத் திட்டங்களுக்கு பணம் செலுத்தினால், நீங்கள் திட்டங்களை எடுத்த வரிசையில் உங்கள் SMART கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும்.
Flexipay customer support ஐ எவ்வாறு தொடர்பு கொள்வது?
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால், live chat, phone support, அல்லது எங்கள் வலைத்தளம் வழியாக எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்ளவும்.
Flexipay பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?
  • முழு பரிவர்த்தனைத் தொகையையும் உடனடியாக தவணை முறைகளாக மாற்றும் திறன்.
  • 3 அல்லது 6 மாதங்களுக்கு வசதியான கட்டண தெரிவுகள்.
  • சேமிப்புக் கணக்கின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு.
  • மேலதிக ஆவணங்கள் எதுவும் தேவையில்லை.
Flexipay க்கு ஒரு மாதம் என்றால் என்ன?
Flexipay க்கான ஒரு மாதம் என்பது 30 நாட்கள் ஆகும், இது நீங்கள் தவணைத் திட்டத்தில் சேர்ந்த திfjpயிலிருந்து கணக்கிடப்படுகிறது.நாட்காட்டியில் காட்டப்பட்டுள்ளபடி இது வழக்கமான நாட்காட்டி மாதம் அல்ல (எ.கா. ஜனவரி 1 முதல் 31 வரை) என்பதை நினைவில் கொள்ளவும்.

உதாரணமாக: ஒரு வாடிக்கையாளர் ஜனவரி 5 ஆம் திகதி 3 மாத தவணைத் திட்டத்தை வாங்கினால், பணம் செலுத்துதல் பின்வருமாறு அமையும்:
  • முதல் தவணை: பெப்ரவரி 4
  • இரண்டாவது தவணை: மார்ச் 5
  • கடைசி தவணை: ஏப்ரல் 4
தாமதமாக செலுத்தப்படும் தொகைக்கு தினசரி அபராத வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் நாட்களுக்கு அபராத வட்டி வசூலிக்கப்படும்.

உதாரணமாக: ஜூன் 2 ஆம் திகதி செலுத்த வேண்டிய தவணை ஜூன் 4 ஆம் திகதி செலுத்தப்பட்டால், இரண்டு நாட்கள் அபராத வட்டி வசூலிக்கப்படும். வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களும் இந்த நோக்கத்திற்காக கணக்கிடப்படுகின்றன..