காலக் கடன் ஒப்பந்தம்

(இதன் பின்னர் இதனகத்தே, இங்கு உபயோகிக்கப்படும் விதத்திலும், சந்தர்ப்ப சூழல் கோரும் அல்லது அர்த்தம் கொள்ளும் வகையிலும் டயலொக் பினான்ஸ் பிஎல்சி ஐயும், அதன் அனுமதிக்கப்பட்ட பின்னுரித்தாளிகள் மற்றும் சாட்டுதல் பெருநர்களையும் உள்ளடக்கிதாக ‘கம்பெனி’ என்றழைக்கப்படும்) முறையாக கூட்டிணைக்கப்பட்டதும் (கம்பெனி பதிவு இல. PB765 PQ), கொழும்பு 02, யூனியன் இடம், இல.475 இல் அதன் பதிவு செய்யப்பட்ட காரியாலயத்தைக் கொண்டதுமான டயலொக் பினான்ஸ் பிஎல்சி மற்றும் கடனாளி இனாலும் அவர்களுக்கிடையிலும் இதன் கீழ் விபரிக்கப்படும் காலம் குறித்த தனிப்பட்ட கடன் வசதியின் நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு செய்து கொள்ளப்படும் காலம் குறித்த கடன் ஒப்பந்தமாகும்.

அதே வேளை, கம்பெனியானது அதிகாரமளிக்கப்பட்ட நிதி நிறுவனமொன்றாக வியாபாரம் மேற்கொள்வதோடு, அதன் வியாபாரத்தின் சாதாரண நடவடிக்கையின் போது, அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதோடு மற்றும் அல்லது நிதி வசதிகளையும் வழங்குகின்றது,

அதே வேளை, குறித்த கடனாளியானவர் தனிப்பட்ட நோக்கத்துக்காக கம்பெனியிடமிருந்து நிதி வசதியொன்றுக்காக விண்ணப்பித்துள்ளதோடு, இதன் கீழ் மேலும் விபரிக்கப்பட்டுள்ள நியதிகள் மற்றும் அல்லது நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த கடன் வசதியை வழங்க குறித்த கம்பெனியானது உடன்பாடு கொண்டுள்ளது.
கம்பெனியும் கடனாளியும் தனித்தனியாக ‘தரப்பு’ எனவும் கூட்டாக ‘தரப்பினர்’ எனவும் குறிக்கப்படுவர்.

நிதி வழங்குதல்
அ) Genie செயலி இனால் உருவாக்கப்பட்டு இதன் கீழ் அட்டவணையின் ‘கூற்றில்’ விபரிக்கப்பட்டுள்ள நிதி வசதியை கம்பெனி வழங்குவதுடன், கடனாளியினால் கம்பெனியில் பேணப்படும் சேமிப்புக் கணக்குக்கு விடுவிக்கும்.

ஆ) இரு தரப்பினரிடையேயும் மாற்றமாக செய்து கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடு அல்லது எழுத்து மூலத்தைக் கருத்தில் கொள்ளாது, மேற்குறிப்பிட்ட தொகையையும் பத்தி 2 (செலுத்துகைகள்) இல் குறிப்பிடப்படும் மற்றைய எல்லா கட்டணங்களையும் செலுத்துவதற்கு கடனாளி இத்தால் வெளிப்படையாக உடன்படுவதோடு, தவணை முறையில் மீளச் செலுத்துவதற்காக கடனாளிக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும், மீள் செலுத்தல் என்னும் அடிப்படைக் கடப்பாட்டுக்கு உட்பட்டவையாகும்.

இ) கம்பெனியின் முறைமைகள், புத்தகங்கள் அல்லது கம்பெனியினால் அதிகாரமளிக்கப்பட்ட யாரும் அலுவலர் ஒருவரினால் கையொப்பமிட்ட மற்றும்/அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட கூற்றுக்கள் மற்றும் சாராம்சங்களில் காண்பிக்கப்படும் இதன் கீழ் கடனாளியினால் DF க்கு கடனாக உள்ள பணங்களுக்கு, அவற்றை ஆதாரப் படுத்துவதற்கு வேறு ஆவணங்களும் பற்றுச் சீட்டுகளும் இல்லாதிருப்பினும், சட்ட ரீதியானவையும் தீர்க்கமானவையும் எனவும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவை கடனாளியினால் செலுத்தப்பட வேண்டியவை என கடனாளிக்கு எதிரான ஆதாரங்கள் எனவும் கடனாளி ஏற்றுக் கொள்கின்றார்.
செலுத்துகைகள்
அ) இந்தக் கடன் வசதி தொடர்பில் கடனாளியின் கடனுக்கு/ கணக்குக்கு பற்றுச் செய்யப்படும் கட்டணங்களை கடனாளி செலுத்த வேண்டியதுடன், ஏதேனும் கிளையில் மற்றும் அல்லது கம்பெனியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள செலுத்தல் வழியில் செலுத்தப்படும் செலுத்துகைகள், கம்பெனியின் பிரதான வியாபார நிலையத்துக்கு செலுத்தப்பட்டதாக கருதப்படும்.

ஆ) கடனாளியினால் செலுத்தப்பட வேண்டிய மாதாந்த தவணைப் பணத்தை செலுத்தித் தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் இயல்புநிலை என்பன இந்த ஒப்பந்தத்தின் இயல்புநிலை செலுத்துகை நியதிகள், நிபந்தனைக்கு உட்பட்டனவகும். இ)
  • i. தாமதம் ஏற்படும் பட்சத்தில், சகல அறவீடுகள், தண்டப் பணம், கட்டணங்கள், வட்டி உடன் முழுக் கடன் தொகையையும் உடனடியாகச் செலுத்துமாறு கோருவதற்கு கம்பெனி உரிமை கொண்டுள்ளது.
  • ii. அக்கோரிக்கைக்குக்கு இணங்கி நடக்கவும் கடனாளி உடன்படுகின்றார்.
ஈ) இந்த ஒப்பந்தத்தின் கீழ் மாதாந்த தவணைப் பணத்தையும், அறவீடுகளையும், கட்டணங்களையும் செலுத்தும் கடப்பாடு எவ்வேளையும் கடனாளியுடையதாகும்.
நியதிகளும் நிபந்தனைகளும்
பின்வருவனவற்றுக்கு இணங்கி நடப்பதற்கு இத்தால் கடனாளி உடன்படுகின்றார்.

அ) கம்பெனியில் பேணப்படும் கடனாளியின் சேமிப்புக் கணக்கிலுள்ள நிதிகளை நிறுத்தி வைக்கும் உரிமையை கம்பெனி கொண்டிருக்குமென கடனாளி உடன்படுகின்றார்.

ஆ) இந்தக் கடன் வசதி தொடர்பில் கம்பெனியில் பேணப்படும் கடனாளியின் கடன் கணக்குக்கு பற்றுச் செய்யப்படும் பின்வரும் மற்றும் வேறெந்த கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
  • 1. சாதாரண கட்டணங்களும், தண்ட வட்டியும்,
  • 2. தபால் மற்றும் கையாள்கை கட்டணங்கள்,
  • 3. கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் ஏனைய சமயாசமய கட்டணங்கள்,
  • 4. வரிகள் அல்லது அரசினால் அல்லது மற்றேதும் சட்ட ரீதியான ஸ்தாபனத்தினால் விதிக்கப்படும் விதிப்பனவுகள்,
  • 5. சட்டச் செலவினங்கள் மற்றும்,
  • 6. கம்பெனிக்குச் செலுத்தப்பட வேண்டிய பணங்களை அறவிட்டுக் கொள்வதில் அதற்கேற்பட்ட மற்றெல்லா செலவினங்களும்.
இ) கடனாளியினால் செலுத்தப்பட வேண்டிய செலுத்துகைகளை செலுத்துவதில் தாமதம் மற்றும் இயல்புநிலை என்பன பத்தி 2 இன் கீழ் விபரிக்கப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் இயல்புநிலை செலுத்துகை நியதிகள், நிபந்தனைக்கு உட்பட்டனவகும்.

ஈ) பின்வரும் சந்தர்ப்பங்களின் போது கடனாளியானவர் உடனடியாக கம்பெனிக்கு அறிவிக்க வேண்டியதோடு, கம்பெனியினால் கோரப்படுமாயின், செலுத்தப்பட வேண்டிய கடன் நிலுவையை செலுத்தவும் வேண்டும்.
  • வாடிக்கையாளரது நிதி நிலைமையில் ஏற்பட எதிர்பார்க்கும் அல்லது ஏற்பட்ட ஏதும் பொருள் மாற்றம்.
  • வாடிக்கையாளரின் நிதி நிலைமையில் தாக்கம் செலுத்தத் தக்க மற்றும் அவர் சம்பந்தப்பட்டுள்ள ஏதும் வழக்கின் விபரங்கள்.
  • வாடிக்கையாளரின் தொழில் முடிவுறுத்தல் அல்லது இராஜினாமா அல்லது அது போன்ற நிகழ்வுகள்.
உ) வாடிக்கையாளருக்கு அறிவித்தலின்றி கம்பெனியானது மாற்றமுடியாத வகையில் பின்வருவனவற்றுக்கு இத்தால் அதிகாரம் உடையது –
  • 1. வாடிக்கையாளரின் வேறு கணக்குகள் அல்லது வைப்பீடுகள் எல்லாவற்றுடனும் அல்லது ஏதாதொன்றுடன் இந்த வசதியை ஒன்றிணைப்பது மற்றும்
  • 2. கடனாளியின் வரவிலிருக்கும் எல்லா பணத்தையும், மட்டுப்படுத்தப்படாத அத்தகைய உரிமையையும், செலுத்துகைகள், கோரிக்கைகள் அல்லது மீளெடுத்தல் அல்லது எந்தவொரு அலுவலர் தொடர்பாகவும் அத்தகைய உரிமையை செயல்படுத்தவும், அவ்வாறு செயல்படுத்திய திகதியன்றோ அல்லது அதற்கு முன்னராக கடனாளியினால் செய்யப்பட்ட மற்றைய ஆவணங்கள் என்பனவற்றை செலுத்தாதிருப்பதன் மூலமும், செலுத்த மறுப்பதன் மூலமும் அந்த உரிமையை செயற்படுத்தவும் மற்றும் கடனாளியின் பெயரிலுள்ள ஏதும் கணக்கை முடிவுறுத்தலுமாகும். கடனாளியின் அத்தகைய செயலினால் கம்பெனி மீது ஏற்படும் எல்லா உரிமை பாராட்டுதல்களுக்கும், கோரிக்கைகளுக்கும் எதிராக கம்பெனியை இழப்பீடு செய்ய கடனாளி இத்தால் ஒப்புக் கொள்கின்றார்.
னாளி கம்பெனிக்கு அதிகாரம் அளிக்கின்றார்.
  • கம்பெனியில் அல்லது அதன் எந்தவொரு கிளையிலும் உள்ள கடனாளியின் எந்த கணக்கையும் பொறுப்புக்களையும் இணைக்கவும், பிணைக்கவும்.
  • கம்பெனி கொண்டுள்ள எந்தவொரு பிணைப் பொறுப்பையும் அல்லது ஆதனத்தையும், எவ்வகையான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டியில்லாது பகிரங்க அல்லது பிரத்தியேக விற்பனை அல்லது பொறுப்புச் சாட்டுதல் அல்லது வேறு விதமாக விற்பனை செய்யவும், கைமாற்றவும், அத்தகைய விற்பனை / கைமாற்றல் / அறுதி / பொறுப்பு சாட்டுதல் என்பவற்றினால் விளையக் கூடிய செலவினங்கள் உட்பட, கடனாளியிடம் இருந்து கம்பெனிக்கு சேர வேண்டிய மொத்த தொகைகளையும் தக்க வைத்துக் கொள்ளவும்/கழிப்பதற்கும்.
க) கடனை முழுமையாகச் செலுத்தித் தீர்ப்பதற்கு முன்னதாக, கடனாளி அதன் செல்லிடத் தொலைபேசியின் உரிமையையும் மற்றும்/அல்லது அதன் சுயவிபரங்ளையும் கைமாற்றக் கூடாது.

ச) கடன் மீதான ஏதும் செலுத்தப்படாத நிலுவை தொடர்பாக கம்பெனியானது பின்வரும் உரிமைகளைக் கொண்டுள்ளது.
  • நிலுவைகளை முழுமையாகச் செலுத்தும் வரை, தரகுப் பணம், கட்டணங்கள் அல்லது கடனாளிக்குச் செலுத்தப்பட வேண்டிய அத்தகைய ஏதும் செலுத்துகைகளை தடை செய்யுமாறு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சிக்கு அறிவுறுத்தல் மற்றும்/ அல்லது,
  • கடனாளிக்கு முன்னறிவித்தல் எதுவுமின்றி, அத்தகைய நிலுவைத் தொகைகளை கடனாளியின் eZ Cash இலுள்ள ஏதும் நிதியில் இருந்து கழிக்குமாறும், அந்த நிலுவைத் தொகைகளை கம்பெனிக்கு வரவிடுமாறும் டயலொக் அக்சியாட்டா பீஎலசிக்கு அறிவுறுத்தல்.
வாடிக்கையாளருக்கு ஒருங்கிணைந்த சேவையை வழங்குவதற்காகவும் மற்றும்/அல்லது ஏதும் நிலுவைகளை அறவிட்டுக் கொள்வதற்காகவும், அதன் தரவுத் தளத்திலுள்ள/ குறிப்பான வாடிக்கையாளர் தகவலை அதனுடைய ஏதாவது துணை நிறுவனத்துடனோ மற்றும்/ அல்லது இணை நிறுவனத்துடனோ மற்றும்/ அல்லது அரச அதிகார சபையுடனோ மற்றும்/ அல்லது குற்றப் புலனாய்வு அல்லது ஏதும் குற்ற வழக்கு சம்பந்தமாகவோ பகிர்ந்து கொள்ளும் உரிமையை கம்பெனி கொண்டுள்ளது..

த) கம்பெனியானது, 2016, 8 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தினால் திருத்தப்பட்ட 1968, 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தின் 39பீ (சி) இன் கீழ் இலங்கையின் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட அதிகார நிறுவனமொன்றென கடனாளி விளங்கியுள்ளார். அதற்கிணங்க, கடனாளியின் தேசிய அடையாள அட்டையின் விபரங்களையும், ஆ.தி. இல் பேணப்படும் விபரங்களையும் பெற்றுக் கொள்வதற்கும், கடனாளியின் கீழ்வரும் தகவல்கள் உட்பட அவரினால் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அதிகாரபூர்வ தன்மையை பரீட்சிப்பதற்கும் கடனாளி இத்தால் விருப்பம் தெரிவிக்கின்றார்.
  • பெயர்
  • விலாசம்
  • பிறந்த திகதி
  • பிறந்த இடம்
  • பாலினம்
  • வழங்கப்பட்ட திகதி
  • புகைப்படம்
  • அடையாள அட்டையின் முற்பக்கத்தினதும் பிற்பக்கத்தினதும் கணணிப் பிரதி
  • அடையாள அட்டையின் காணப்படும் தகவலை உள்ளடக்கிய குறியீட்டின் கணணிப் பிரதி
  • தகவலின் தன்மை (நடைமுறையிலுள்ளது/ நடைமுறையில் இல்லாதது/ செல்லுபடியற்றதாக்கப்பட்டது/ செல்லுபடியற்றது).
முக்கிய மீறல்
அ) உரிய தினத்தில் கடனாளி பணத்தைச் செலுத்தத் தவறுதலும் கோரப்படும் போது (சகல அறவீடுகள், தண்டப் பணங்கள், கட்டணங்கள், வட்டி, மற்றும் நிலுவையிலுள்ள வேறு தொகைகள் என்பவற்றுடன முழுத் தொகையையும் வட்டியுடன் செலுத்தத் தவறுதல்,

ஆ) இந்த ஒப்பந்தத்தின் ஏதும் நியதிகளையும் நிபந்தனைகளையும் ஒழுகி நடப்பதற்கு கடனாளி தவறுதல் மற்றும்/ அல்லது உதாசீனம் செய்தல், ஆகிய நிலைமைகளில் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகக் கொள்ளப்படும்.
மீறுகையினதும் தவறுகையினதும் விளைவுகள்
அ) ஏதும் முக்கிய மீறல் நடைபெற்றால், இந்த ஒப்பந்தத்தினை உடனடியாக முடிவுறுத்தும் உரிமையை கம்பெனி கொண்டிருக்கும். அத்தகைய முடிவுறுத்துவதானது, முடிவுறுத்தலுக்கு முன்னர் இந்த ஒப்பந்தத்தின்பால் கம்பெனிக்கு உரித்தான முறைப்படியான உரிமைகளுக்கு பராதீனமாக அமையாது.

ஆ) பத்தி 4 (முக்கிய மீறல்) இல் விபரிக்கப்பட்ட முக்கிய மீறல் அல்லாத ஏதும் தவறுகை நிகழ்ந்து, பற்றி கம்பெனியினால் கடனாளிக்கு அறிவிப்பட்டு 07 நாட்களின் பின்னரும் அது சீர் செய்யப்படாவிடத்து, இந்த ஒப்பந்தத்தை கம்பெனி எந்நேரத்திலும் முடிவுறுத்தலாம்.

இ) இவ்வொப்பந்தம் முடிவுறுத்தப்பட்டதன் பின்னரும், அவற்றின் தன்மையினால் நடைமுறையில் இருக்க நாடப்படும், இவற்றிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாத பத்திகளாவன, நியதிகளும் நிபந்தனைகளும் (பத்தி 3), செலுத்துகை (பத்தி 2), ஆளூமைச் சட்டமும் முரண் தீர்வும் (பத்தி 8) என்பனவாகும்.
உரிமை விட்டுக் கொடுப்பும் மாறுகையும்
அ. இதன் கீழ் விபரிக்கப்பட்டுள்ள ஏதும் உரிமை, அதிகாரம், சிறப்புரிமை, கோரிக்கை அல்லது பரிகாரம் என்பவற்றை நடைமுறைப்படுத்தல், செயற்படுத்தல் அல்லது தொடர்தல் போன்றனவற்றின் போது ஏதும் தரப்பினரால் ஏற்படும் தாமதம், தவறு அல்லது கைவிடுதல் அல்லது இதன் கீழான பொறுப்புடைமைகள் ஏதும் தரப்பினரால் மீறப்படுதல் என்பன, அவற்றை விட்டுக் கொடுத்ததாக அர்த்தம் கொள்ளவோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும், செயற்படுத்துவதற்கும் இதன் பிறகு எவ்வேளையிலும் தடையாக செயற்படவோ கூடாது.
பிரிக்கக் கூடிய தன்மை / சட்ட விரோதம்
அ) இந்த ஒப்பந்தத்தில் ஏதும் நியதி அல்லது ஏற்பாடு, ஏதும் சட்டவாக்கம் அல்லது சட்டவாட்சியின் கீழ் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சட்ட விரோதமானது அல்லது நடைமுறைப்படுத்தப்பட முடியாதது எனக் கொள்ளப்பட்டால், அத்தகைய நியதி அல்லது ஏற்பாடு அந்தளவில் இந்த ஒப்பந்தத்தின் பகுதியாக கொள்ளப்படல் ஆகாது. எனினும், இந்த ஒப்பந்தத்தின் எஞ்சியவையின் நடைமுறைப்படுத்தல் தன்மை பாதிக்கப்படலாகாது.
பிரத்தியேக சட்டவாதிக்கம்
இந்த ஒப்பந்தமும் இதன் கீழ் வழங்கப்பட்ட பிணையும் எல்லா அம்சங்களிலும் இலங்கைச் சட்டத்தினால் ஆளப்பட வேண்டியதோடு, அர்த்தம் கொள்ளவும்பட வேண்டியதுடன், நியாயாதிக்க நீதிமன்றம் கொழும்பாகும்.
அறிவித்தல்கள்
அ) இந்த ஒப்பந்தத்தின் கீழான சகல கோரிக்கைகளும், அவ்வக்காலத்தில் கம்பெனியின் சார்பில் செயற்படும் யாரும் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் அல்லது ஏதும் நிறுவனம்
ஊடாக கம்பெனியினால் கடனாளிக்கு முகவரியிட்ட கடிதமொன்றின் மூலம் தபாலில் அனுப்பப்படலாம் அல்லது இதில் முன்னர் முகவரிக்கு விநியோகிக்கப்படலாம். அவ்வாறு செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட கோரிக்கை அறிவித்தலானது, அவ்வாறு விநியோகிக்கப்பட்ட நாளில் அல்லது அடுத்த நாளில் பெற்றுக் கொள்ளப்பட்டதாக கருப்படும்.

ஆ. எல்லா ஞாபகமூட்டுதல்களும் மற்றும் அறிவித்தல்களும் குறுந் தகவல் சேவை (SMS), மின்னஞ்சல் அல்லது ஏற்றுக் கொள்ளத்தக்க தொடர்பு முறை ஊடாக காலத்துக்குக் காலம் வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது இலத்திரனியல் அஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டும். குறித்த தகவல்கள் இலத்திரனியல் தகவல்கள் என்பதனால், அவை சட்ட ரீதியான பிணைக்கும் ஞாபகமூட்டுதல்கள் என கடனாளி இத்தால் வெளிப்படுத்துகின்றார்.

இ. சகல செலுத்துகைகளும், அவை செலுத்துகைகள்/ இழப்புக்கள்/ சட்ட ரீதியான செலுத்துகைகள்/ சேவைக் கட்டணங்கள் என்றவாறு கொள்ளப்பட்டாலும், அவை யாவும் பெற்றுக் கொள்ளப்பட்டவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவும் வேண்டும்.
நானாவிதம்
அ. இந்த ஒப்பந்தத்தின் கீழான அதன் உரிமைகளையும் பொறுப்புடைமைகளையும் உரித்து மாற்றவும் கைமாற்றவும் செய்யலாம். அத்தகைய உரித்து மாற்றங்களும் கைமாற்றுதல்களும் அது பற்றி கடனாளிக்கு அறிவிக்கப்படுவதன் மூலம் நடைமுறைக்கு வரும்.

ஆ. இந்த நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் இடையேயும், அவற்றின் சிங்கள மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கு இடையேயும் ஏதும் ஒவ்வாமை நிலவுமாயின், ஆங்கில நியதிகளும் நிபந்தனைகளும் ஆளுமையுடையனவாய் இருக்கும்.
வரைவிலக்கணங்கள்
அ) கடனாளி – என்பதன் அர்த்தமாவது, அவரின் கோரிக்கையின் பேரில் கம்பெனியானது காலம் குறித்த கடனை வழங்கியுள்ளதுடன், 2006, 19 ஆம் இலக்க இலத்திரனியல் பணப் பரிமாற்றச் சட்டத்தின் நியதிகளின் கீழ் அவரின் கையொப்பத்தை வைப்பதன் மூலம் இந்த நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உடன்பட்டுள்ளவராவார்.

ஆ) வசதி – என்பதன் அர்த்தமாவது, இதன் அட்டவணையில் விபரிக்கப்பட்டுள்ளதும், காலம் குறித்த கடன் திட்டத்தின் கீழ் டயலொக் பினான்ஸ் பிஎல்சி யினால் கடனாளிக்கு வழங்கப்பட்டுள்ளதுமான கடன் வசதி.

இ) ஒப்பந்தம் – என்பதன் அர்த்தமாவது, இந்த ஒப்பந்தமாகும். 2006, 19 ஆம் இலக்க இலத்திரனியல் பணப் பரிமாற்றச் சட்டத்தின் நியதிகளின் கீழ் தரப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டது.