கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளீர்களா?

நீங்கள் எப்போதாவது கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கின்றீர்களா? இப்போது பங்குதாரராக மாறுவது மிகவும் எளிது! இலங்கையில் முதல் முறையாக, முற்றிலும் டிஜிட்டல் மற்றும் மிகவும் வசதியான பங்குச் சந்தை அனுபவத்தை உங்களுக்கு வழங்க, Genie App மூலம் முன்னணி தரகு நிறுவனங்களுடன் நாங்கள் கூட்டிணைந்துள்ளோம்.

CDS கணக்கைத் திறப்பது முதல், பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது, சந்தைத் தரவைப் பார்ப்பது மற்றும் உங்கள் முதலீடுகள் ngWkjp வளர்வதைப் பார்ப்பது வரை, இப்போது அனைத்Jk; உங்கள் கையில்.

விரையுங்கள்! எளிதாகவும் பாதுகாப்பாகவும் முதலீடு செய்யுங்கள், Genie app இல் “Stocks” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பிரதான சேவைகள்
கணக்கு திறக்கும் செயல்முறை எளிதானது
CDS கணக்கைத் திறத்தல்
வர்த்தகக் கணக்கில் பணத்தை வைப்பு செய்தல் மற்றும் மீள் பெறுதல்
பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றல்
உங்கள் Portfolio ஐ அணுகுதல்
தொந்தரவு இன்றி பதிவு செய்யுங்கள்
  • முழு பதிவு செயல்முறையையும் ஆன்லைனில் நிறைவு செய்ய முடியும்.
  • உங்கள் தகவல்களைச் சரிபார்க்க எங்கள் அலுவலகத்திற்குச் செல்லவோ அல்லது ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ தேவையில்லை.
விரைவாகவும் எளிதாகவும் பணப் பரிமாற்றம்
  • உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து அல்லது வேறு எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் இந்தக் கணக்கில் எளிதாக பணத்தை இணைக்கலாம்.
  • நீங்கள் ரூ. 1,000/- லிருந்து முதலீடு செய்யத் தொடங்கலாம்.
  • நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் முதலீட்டைப் பணமாக்கிக் கொள்ளலாம்.
சரியான முதலீட்டு உத்தியைத் தீர்மானிக்கத் தேவையான தகவல்கள்
  • இதன் மூலம் எந்தவொரு நேரத்திலும் ஒரு பங்கின் கடைசி வர்த்தக விலை, தற்போதைய விலை மற்றும் வாங்குதல்-விற்பனை தகவல் போன்ற தகவல்களைப் பார்க்கலாம்..
  • தினசரி சந்தை நிலவரத்தை நீங்கள் எப்போதும் அறிந்துக்கொள்ளலாம்.
  • நீங்கள் ஒரு தகுதிவாய்ந்த முதலீட்டு ஆலோசகரிடமிருந்தும் ஆலோசனை பெறலாம்.
  • உங்கள் முதலீடு எவ்வாறு அதிகரிக்கின்றது என்பதை எந்த நேரத்திலும் நீங்கள் கண்காணிக்கலாம்.
  • பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
பங்கு (Stock) என்றால் என்ன?
ஒரு பங்கு என்பது ஒரு நிறுவனத்தின் உரிமையில் ஒரு சிறிய பகுதியாகும். நீங்கள் அத்தகைய பங்கை வாங்கும்போது, நீங்கள் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆகின்றீர்கள். எனவே, நிறுவனம் வளர்ச்சியடைந்தால், நீங்கள் லாபம் ஈட்டலாம். நிறுவனத்தின் சில முடிவுகளில் வாக்களிக்கும் வாய்ப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.
பங்குச் சந்தை (Stock Exchange) என்றால் என்ன?
பங்குச் சந்தை என்பது பொதுமக்கள் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனங்களின் பிற பொருட்களை எளிதாக வாங்கவும் விற்கவும் கூடிய இடமாகும். பங்குகளை வாங்கி விற்பவர்களுக்கு இது ஒரு திறந்த சந்தையாகும்.
கொழும்பு பங்குச் சந்தை (CSE) என்றால் என்ன?
கொழும்பு பங்குச் சந்தை (CSE) இலங்கை பங்குச் சந்தையின் செயல்பாட்டு அமைப்பாகும். இது இலங்கைப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் (SEC) ஒழுங்குபடுத்தப்பட்டு உரிமம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.
நான் ஏன் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்?
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது உங்கள் வருமானத்தைப் பயன்படுத்தி காலப்போக்கில் லாபத்தை ஈட்ட ஒரு சிறந்த வழியாகும். பங்கு விலைகள் தினமும் மாறுகின்றன, மேலும் நிலையான பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம், அவற்றை விற்கும்போது நீங்கள் லாபம் ஈட்டலாம்.பங்குகளின் மதிப்பு அதிகரிப்பால் கிடைக்கும் லாபத்துடன், நிறுவனங்களிடமிருந்தும் லாபத்தைப் பெறுவீர்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், லாபத்தை செலுத்துவது கட்டாயமில்லை, அது நிறுவனத்தின் முடிவைப் பொறுத்தது.

ஏனைய முதலீட்டு முறைகளுடன் ஒப்பிடும்போதுஇ பங்குச் சந்தை முதலீடுகளை மிக எளிதாக பணமாக மாற்ற முடியும். அதாவது, அவற்றை எளிதாக விற்று எந்த நேரத்திலும் பணமாக மாற்றலாம். எனவே, பங்குகளில் முதலீடு செய்வது முதலீட்டாளருக்கு அதிக நிதி கட்டுப்பாட்டை அளிக்கிறது.

உங்கள் பணத்தில் சிறிதளவு தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் முதலீடுகளை பல்வகைப்படுத்தலாம் மற்றும் ஆபத்தைக் குறைக்கலாம்.
பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்றால் என்ன?
ஒரு நிறுவனம் தனது வணிகத்தை வளர்ப்பதற்காகப் பணம் திரட்டுவதற்காக முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை விற்கும் போது, அந்தப் பங்குகள் சம்பந்தப்பட்ட நாட்டின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்.மேலும், அத்தகைய நிறுவனங்கள் பங்குச் சந்தையின் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
நான் எப்படி பங்குகளை வாங்குவது?
எங்கள் Genie App இல் ஒரு பங்காளர் தரகு நிறுவனம் மூலம் இரண்டாம் நிலை சந்தையில் (Secondary Market) பங்குகளை எளிதாக வாங்கலாம்.
CDS கணக்கு என்றால் என்ன?
கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய, ஒரு முதலீட்டாளர் அங்கீகரிக்கப்பட்ட பங்கு தரகு நிறுவனம் மூலம் CDS கணக்கைத் திறக்க வேண்டும். CDS கணக்கு என்பது வழக்கமான வங்கிக் கணக்கைப் போன்றது.இது கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பத்திரங்களின் உரிமை மற்றும் பரிவர்த்தனைகளைக் குறிக்கும் ஒரு வழியாகும்.
நான் ஏன் CDS கணக்கைத் திறக்க வேண்டும்?
ஒரு CDS கணக்கு கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் வாங்கும் பத்திரங்கள் உங்கள் CDS கணக்கில் சேர்க்கப்படும், மேலும் நீங்கள் விற்கும் பத்திரங்கள் அந்தக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
நான் எப்படி ஒரு CDS கணக்கைத் திறப்பது?
Genie App இல் உள்நுழைந்து, “stock trading” Tab ஐ க்ளிக் செய்து, “open an account” என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் தகவலை சமர்ப்பிக்கவும். உங்கள் தகவல்கள் தரகு நிறுவனத்தால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, கணக்கு திறப்பதற்காக CSE க்கு அனுப்பப்படும்.
CDS கணக்கைத் திறக்க நான் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமா?
ஆம். உங்கள் தேசிய அடையாள அட்டையின் முன் மற்றும் பின் புகைப்படங்கள், உங்கள் முகவரி உங்கள் தேசிய அடையாள அட்டையில் உள்ள முகவரியிலிருந்து வேறுபட்டால் உங்கள் முகவரியை சரிபார்க்க ஒரு ஆவணம், உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைச் சரிபார்க்க ஒரு ஆவணம் மற்றும் உங்கள் புகைப்படம் (செல்ஃபி) ஆகியவற்றை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
CDS கணக்கைத் திறக்க கட்டணம் ஏதேனும் உள்ளதா?
இல்லை. CDS கணக்கைத் திறப்பது இலவசம்.
CDS கணக்கைத் திறக்க எவ்வளவு நேரம் ஆகும்?
உங்கள் தகவல் மற்றும் மின்னஞ்சல் முகவரியைச் சமர்ப்பித்தவுடன்இ விதிமுறைகளின்படி சரிபார்ப்பு செயல்முறையை நிறைவு செய்ய தோராயமாக 3 வணிக நாட்கள் ஆகும்.இந்த செயல்முறையில் ஒரு தொலைபேசி அழைப்பு தேவைப்பட்டால், உடல் ரீதியான சரிபார்ப்பு ஆகியவை அடங்கும்.
CDS கணக்கைத் திறந்த பிறகு நான் முதலில் என்ன செய்ய வேண்டும்?
Genie App இல் உள்நுழைந்து, “stock trading” Tab ஐ க்ளிக் செய்து, உங்கள் வர்த்தக டாஷ்போர்டுக்குச் (dashboard) செல்லவும். பங்குகளை வாங்கவும் விற்கவும் தொடங்க, உங்கள் வர்த்தகக் கணக்கில் பணத்தை சேர்க்க வேண்டும்.
எனது வர்த்தகக் கணக்கில் பணத்தைச் சேர்க்க என்ன கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம்?
  • பிற வங்கி சேமிப்புக் கணக்குகள்
  • genie டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகள்
  • ஏனைய வங்கி App கள் (CEFT) மூலம் பணம் அனுப்புதல்
  • குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ. 1,000 ஆகும்.
வர்த்தகக் கணக்கில் பணத்தை சேர்க்கும்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் யாவை?
  • genie டிஜிட்டல் சேமிப்புக் கணக்கு - கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
  • பிற வங்கி சேமிப்புக் கணக்கு - கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
  • பிற வங்கி App கள் மூலம் பணம் அனுப்புதல் - அந்தந்த வங்கிகளிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படலாம்.
நான் எப்படி பணம் எடுப்பது?
Genie App இல் உள்நுழைந்து, “stock trading” Tab ஐ க்ளிக் செய்து, “withdraw” பட்டனை க்ளிக் செய்யவும். பின்னர் உங்கள் வர்த்தகக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். பணத்தை எடுக்க, உங்கள் வர்த்தகக் கணக்கில் போதுமானளவு பணம் இருக்க வேண்டும். உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்த 2 வணிக நாட்கள் வரை ஆகலாம்.
"Unsettled cash" என்றால் என்ன?
"Unsettled cash" என்பது நீங்கள் விற்ற பங்குகளிலிருந்து பெறப்பட்ட தொகையாகும், அது இன்னும் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அது வரவு வைக்கப்பட்டவுடன், “unsettled cash” மிகுதி “available to withdraw” மிகுதியில் சேர்க்கப்படும்.இந்தத் தொகையுடன் பங்குகளை வாங்கினால், இதுவரை வரவு வைக்கப்படாத தொகை, வாங்கிய பங்குகளின் மதிப்பால் குறைக்கப்படும். இது குறித்த மேலதிக தகவலுக்கு, ssb.inquiry@softlogic.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது 0117277000 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்.
பரிவர்த்தனைக்கு பொருந்தக்கூடிய கட்டணங்கள் யாவை?
  • ரூ. 100 மில்லியனுக்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்

  • தரகு கட்டணம் – 0.640%
    CSE கட்டணம் – 0.084%
    CDS கட்டணம் – 0.024%
    SEC கட்டணம் – 0.072%
    பங்கு பரிவர்த்தனை வரி – 0.300%
    மொத்தம் – 1.12%

  • ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்

  • குறைந்தபட்ச தரகு கட்டணம் – 0.200%
    CSE கட்டணம் – 0.0525%
    CDS கட்டணம் – 0.0150%
    SEC கட்டணம் – 0.0450%
    பங்கு பரிவர்த்தனை வரி – 0.300%

  • ரூ. 100 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனைக் கட்டணங்கள் அதிகரிக்கும் அடிப்படையில் வசூலிக்கப்படுகின்றன.
நான் எந்த நாட்கள் மற்றும் நேரங்களில் பங்குகளை கொள்வனவு செய்யலாம்?
அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை கொழும்பு பங்குச் சந்தை திறந்திருக்கும்.விடுமுறை நாட்கள் தொடர்பான சிறப்பு அறிவிப்புகளுக்கு CSE வலைத்தளத்தை பார்வையிடுங்கள். வழக்கமான வர்த்தக நேரம்: காலை 9.30 - பிற்பகல் 2.30 (Pre-open Session – காலை 9.00 - காலை 9.30) வர்த்தக நேரம் CSE இன் விருப்பப்படி மாற்றத்திற்கு உட்பட்டது.
"Odd lot"என்றால் என்ன?
100 பங்குகளுக்குக் குறைவான பங்குகளின் எண்ணிக்கை "Odd lot" என்று கருதப்படுகிறது.
"Odd lot பொருட்களை" ஆன்லைனில் வர்த்தகம் செய்ய முடியுமா?
ஆம், உங்களால் முடியும்.
பங்குகளில் முதலீடு செய்வதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் என்ன?
பங்குகளில் முதலீடு செய்வதில் உள்ள அபாயங்கள் பங்கின் விலையுடன் நேரடியாக தொடர்புடையவை. சில நேரங்களில் வியத்தகு முறையில் பங்கு விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.ஒரு பத்திரத்தின் விலை ஏறலாம் அல்லது இறங்கலாம், சில சமயங்களில், அது மதிப்பை கூட இழக்க நேரிடும். பங்குகளை வாங்குவதும் விற்பதும் லாபத்தை விட இழப்புகளையே விளைவிக்கும் வாய்ப்பு அதிகம்.
நீங்கள் ஒரு சேவை கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றால், Genie App இல் இந்தப் படிகளை பின்பற்றவும்:

1.Genie App இல் Log ஆகுங்கள்.
2.முதன்மைத் திரையின் கீழே உள்ள “Service Request” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3.“Other Request” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.