“Dialog Pay Rewards Week” பிரச்சாரம் Dialog Finance PLC நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த பிரச்சார காலம் 2026 Aug 25 முதல் 2026 Aug 31 வரை (இரு தினங்களும் உள்ளடங்களாக) செல்லுபடியாகும். இந்த காலத்துக்கு வெளியே மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் இந்த சலுகைக்கு தகுதியற்றதாகும்.
இந்த சலுகை Dialog Finance சேமிப்பு கணக்கைப் பயன்படுத்தும் Dialog Finance PLC சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும் பொருந்தும்.
தகுதி பெறுவதற்காக, வாடிக்கையாளர்கள் பிரச்சார காலத்தில் Dialog Pay Savings மூலம் குறைந்தது 02 utility பில் கட்டணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு (telco) கட்டணங்களை மேற்கொள்ள வேண்டும்.
தகுதியான பரிவர்த்தனைகள் பின்வருமாறு:
Dialog Pay Savings மூலம் utility Bill Payments (CEB, LECO, Water board)
Dialog Pay Savings மூலம் தொலைத்தொடர்பு கட்டணங்கள் (Dialog Postpaid, Airtel Postpaid, Hutch Postpaid, Dialog TV, Dialog HBB)
தகுதியான வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ. 2,500 பெறுமதியான Glomark E-Vouchers வெல்லும் வாய்ப்பு வழங்கப்படும். மொத்தம் 25 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மற்றும் பிரச்சாரத்தின் நிறைவு தேதியிலிருந்து ஒரு வாரத்திற்குள் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
பிரச்சார காலத்தில் ஒவ்வொரு தனிப்பட்ட வெற்றியாளருக்கும்/வாடிக்கையாளருக்கும் ஒரு (1) E-Voucher மட்டும் வழங்கப்படும்.
Dialog Finance PLC நிறுவனத்தின் ஊழியர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்க தகுதியற்றவர்கள்.
வெற்றியாளர்கள் Dialog Finance PLC நிறுவனத்தின் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். நிறுவனத்தின் தீர்மானம் இறுதியும் கட்டுப்படுத்தப்பட வேண்டியதுமானதாகும்.
இந்த பிரச்சாரத்தின் கீழ் வழங்கப்படும் Glomark E-Vouchers 2026 டிசம்பர் 31 அன்று காலாவதியாகும். காலாவதியான வவுச்சர்கள் நீட்டிக்கப்படமாட்டாது, மாற்றப்படமாட்டாது அல்லது பணமாக மீட்டெடுக்கப்படமாட்டாது.
E-Vouchers மாற்றிக்கொடுக்க முடியாதவை, பணத்தை மீளப் பெற முடியாதவை மற்றும் பணமாக அல்லது வேறு எந்த நன்மையாகவும் மாற்றிக்கொள்ள முடியாதவை.
Dialog Finance PLC நிறுவனம் பரிவர்த்தனைகளின் தகுதியை சரிபார்க்கவும், மோசடி, தவறான பயன்பாடு அல்லது பிரச்சார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பங்கேற்பாளர்களை தகுதி நீக்கம் செய்யவும் உரிமையுடையது.
பொருந்தக்கூடிய சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு உட்பட்டு, இந்த ஊக்குவிப்புத் திட்டத்தை திருத்துவதற்கும், தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அல்லது நிறுத்துவதற்கும் Dialog Finance PLC உரிமையைக் கொண்டுள்ளது. ஏதேனும் முக்கியமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், அவை பொருத்தமான தொடர்பாடல் வழிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
இந்த பிரச்சாரத்தில் பங்கேற்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணங்க ஒப்புக்கொள்கிறார்கள்.